ஒரு html program –க்குத் அடிப்படை தேவையான tags கீழே பின்வருமாறு காண்போம்:
- < html > - முதன்முதலில் கொடுக்கப்படும் இந்த tag-ஆனது browser-க்கு இது ஒரு html program என்பதை உணர்த்துகிறது.
- < head > - அடுத்ததாக உள்ள இந்த tag-ஆனது browser-ன் தலைப்பை அமைக்கப் பயன்படுகிறது.
- < title > - head - ஐத் தொடர்ந்து வரும் title எனும் tag-க்குள் அமையும் வார்த்தைகளே வலைதளைத்தின் தலைப்பாக அமைகிறது. < /title > எனும் tag தலைப்பு வார்த்தை முடிவுற்றதை உணர்த்துகிறது.
- இதன் பின்னர் < head / > எனும் tag-ஐயும் நாம் முடித்துக் கொள்கிறோம். இத்தகைய tags-ஐ ஒவ்வொரு html program -லும் பயன்படுத்த வேண்டும்.
- < body > - வலைதளைத்தில் இடம்பெற வேண்டிய மொத்த program-மும் இந்த tag-க்குள் தான் அமையும். </ body > எனும் tag முடிவுற்றதை உணர்த்துகிறது.
- இறுதியாக அமைந்துள்ள </ html > எனும் tag program , முடிவுற்றதை உணர்த்துகிறது.
- இது போன்று <html ></html >,< title ></ title >,< head ></ head >,< body ></ body > போன்ற
ஒவ்வொரு tag-ம் தொடர்ந்து அதே வார்த்தைகளைப் பெற்று முடிக்கப்படுவதை இணை tags அல்லது ஜோடி tags என்பர்.
- இதில் title tag-க்குள் கொடுக்கப்பட்ட Tag எனும் வார்த்தை browser-ன் தலைப்பாக அமையும்.
Output:
Comments (0)