Backdrawer

Other Entries

Recession 2023

உலக மக்களிடையே கொரானா தாக்கம் குறைந்த பிறகு, 2022 யில் உலக பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதிக பணவீக்கம், உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் மற்றும் உக்ரைன், ரஷ்யா போர் ஆகியவற்றால் உலகம் பின்னடைவைச் சந்திக்கும் என்பதை பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 
 
இந்த ஆண்டு International Monetary Fund வெளியிட்ட அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 2.9 % ஆக உள்ளது, இது 2022 யில் மதிப்பிடபட்ட 3.4 % விட வளர்ச்சியில் குறைந்துள்ளது. உலகளாவிய பணவீக்கம் 2022 யில்  8.8 % இருந்து 2023 யில் 6.6 % ஆகவும், 2024 யில் 4.3 % ஆகவும் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், வருங்காலங்களில் உலகப் பொருளாதார மந்தநிலையால் ஏற்படும் அச்சம் எவ்வகையில் பாதிப்பை உண்டாகும் மற்றும் அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை பற்றி இந்த ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.
 
450_d76ce72172b3ebffe686f51b3026e2c4.jpg
 
மந்தநிலையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறிப்பிட்ட மாதம் வரை தொடர்ந்து குறையும்போது மந்தநிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில், வேலையின்மையும் அதிகரிக்கிறது. 
 
Understanding Recessions
 
பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட உயரத்தை அடைந்தப் பிறகு மீண்டும் சரிவை நோக்கி போகும்போது மக்கள் வேலையை இழக்கிறார்கள், நிறுவனங்கள் குறைவான விற்பனையை செய்கின்றன, பங்குச்சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி பங்குகள் பாதிப்புக்கு உள்ளாகிறது, கடன் சுமை அதிகரிக்கிறது மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி குறைகிறது. இதுப்போன்ற காரணிகளால் பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக மந்தநிலையில் சந்திக்கிறது. 
 
மந்தநிலையால் பொருளாதார உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்படும் சரிவுகள் நுகர்வோர் தேவையை குறைத்து, ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனங்களைத் தூண்டுகிறது, இது நுகர்வோர் செலவின சக்தியை பாதிக்கிறது, இது நுகர்வோர் தேவையை மேலும் பலவீனப்படுத்துகிறது. மக்கள் மந்தநிலை சமாளிக்க செலவீனங்களை குறைக்கலாம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வேலையிழந்த ஊழியர்களுக்கு பணத்தை வழங்க வேலையின்மை காப்பீடு அளிக்கலாம் மற்றும் முதலீட்டைத் தூண்டுவதற்கு வட்டி விகிதங்களைக் குறைப்பது போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
 
இதுவே இந்த மந்தநிலை நீண்ட வருடங்கள் வரை சென்றால் அது "Great Recession" அல்லது "Depression" என்று சொல்லப்படுகிறது. அதற்கு எடுத்துக்கட்டாக, 1929 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில், அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய பெரும் மந்தநிலை, நவீன வரலாற்றில் மிக நீண்ட மற்றும் மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை உலகம் சந்தித்தது, தொழில்துறை உற்பத்தி மற்றும் விலைகள் குறைந்தன, அதிக வேலையின்மை, வங்கிகள் பின்னடைவு, மக்களிடையே வறுமை மற்றும் வீடற்றவர்களின் விகிதங்களில் அதிகரிப்பு போன்றவை நேர்ந்தன. 1929 முதல் 1939 வரை நீடித்த தொழில்மயமான உலக வரலாற்றில் பெரும் மந்தநிலை மற்றும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி அடைந்தது. 
 
Causes of Recessions
 
திடீர் பொருளாதார ஏற்றத்தாழ்வு கடுமையான நிதி சேதத்தை உருவாக்கும் இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமீபத்திய, உலகளவில் பொருளாதாரத்தை முடக்கிய கொரோனா தொற்று திடீர் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு உதாரணம்.
 
தனிநபர்கள் அல்லது வணிகங்கள் அதிகக் கடனைப் பெறும்போது, கடனைச் செலுத்துவதற்கான தொகை செலுத்த முடியாத அளவிற்கு பெருகினால் மந்தநிலையை ஏற்படுத்தும் அதிகப்படியான கடனுக்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.
 
அதிகப்படியான பணவீக்கம் ஒரு ஆபத்தான நிகழ்வு. மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகின்றன, மேலும் அதிக வட்டி விகிதங்கள் பொருளாதார நடவடிக்கைகளை குறைக்கின்றன. அது மந்தநிலையை ஏற்படுத்தும்.
 
அதிகப்படியான பண மதிப்பிழப்பு ஊதியங்கள் குறைய காரணமாகிறது, மேலும் மக்களும் வணிகமும் செலவழிப்பதை நிறுத்தும்போது பொருளாதாரம் பண மதிப்பிழப்பிற்கு  உட்படுத்துகிறது.
 
இன்று, புதிய கண்டுபிடிப்புகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன மற்றும் நீண்ட காலத்திற்கு பொருளாதாரத்திற்கு உதவுகின்றன, சில பொருளாதார வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும் ரோபோக்கள் பல வேலைகளையும் நீக்குவதன் மூலம் மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதுகின்றனர். 
 
How to Know a Recession is Coming?
 
பொருளாதார மந்தநிலையை கணிப்பதன் மூலம் கிடைக்கும் முடிவானது நம்பிக்கைத்தன்மை குறைவு. இருப்பினும், சில காரணிகள் மூலம் கணிக்கலாம். முதலீட்டாளர்கள் பங்குகள் மற்றும் பத்திரங்களின் மீது Long term முதலீடு செய்யும்போது கிடைக்கும் லாபம், Short term முதலீடில் கிடைக்கும் லாபத்தை விட குறைவாக இருந்தால் அது மந்தநிலை வருவதற்கான அறிகுறியாகும். 
 
சில நேரங்களில், முதலீட்டாளர்கள் பொருளாதார மந்தநிலையை எதிர்பார்த்து தங்கள் பங்குகளை விற்றுவிடுவார்கள் அப்போது, பங்குச் சந்தையில் ஒரு பெரிய சரிவு ஏற்படலாம். அது மந்தநிலைக்கான அறிகுறியாக இருக்கலாம். 
 
கணக்கெடுப்பின்போது நுகர்வோர் செலவு தொடர்ச்சியான வீழ்ச்சியைக் காட்டினால் அது பொருளாதாரத்திற்கு வரவிருக்கும் சிக்கலின் அறிகுறியாக இருக்கலாம். ரிசர்வ் வங்கி இன்னும் அதிகாரப்பூர்வமாக மந்தநிலையை அறிவிக்காவிட்டாலும் ஒரு சில மாதங்களில் அதிக வேலை இழப்புகள் பொருளாதார மந்தநிலைக்கான பெரும் எச்சரிக்கையாகும். 
 
The Impact of the Recession on Workers
 
மந்தநிலையின் தாக்கம் அரசு மற்றும் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதாவது,மூடப்பட்ட வணிகப் பகுதிகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கான பணியாளர் செயல்திறன் நடவடிக்கைகள், பணிநீக்கங்கள் காரணமாக பலர் தங்கள் வேலையை இழக்க நேரிட்டது. ஆட்குறைப்புகளால் பாதிக்கப்படாத தொழிலாளர்களும் அவர்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதால் பாதிக்கப்படுகின்றனர். இதுப்போன்ற சூழல் மேலும் அதிகரித்தில் சமூக உறுதியற்ற தன்மை, எல்லா இடங்களிலும் வளர்ந்து வரும் அதிக குற்ற விகிதத்திற்கான உந்து சக்தியாகும்.
 
How can we protect ourselves from recession?
 
பொருளாதார மந்தநிலையில் நீங்கள் செய்யக்கூடிய பணத்தை நிர்வகிக்க சில வழிகள் உள்ளன.
 
தேவைக்கேற்ப பொருட்களை வாங்கி, அடிப்படை தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். மீதமுள்ள பணத்தை கடனை செலுத்துதல், சேமிப்பு அல்லது முதலீடு செய்தல் மற்றும் அவசரகால நிதியைத் தயாரித்தல் போன்ற முக்கியமான விஷயங்களுக்கு ஒதுக்கலாம்.
 
அதிக வட்டி விகிதம் உள்ள கடகளை முதலில் செலுத்துவது மந்தநிலையை சமாளிக்க ஒரு நல்ல வழி. 
 
அடுத்தது  உடல்நல காப்பீடு, குறிப்பாக உடல்நலப் பிரச்சனைகளுக்கு திடீரென பெரிய அளவு நிதி தேவைப்படும்போது பணம் செலுத்துவதில் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கு உடல்நலக் காப்பீடு உதவியாக இருக்கலாம்.
 
ஆரோக்கியமான நிதி நிலையைப் பராமரிப்பதில் சிக்கனம் உங்களுக்கு உதவும். அதைப்போல், உங்களிடம் கூடுதல் வருமானம் இருந்தால் மிகவும் நல்லது, இதனால் சேகரிக்கப்பட்ட நிதி எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய திடீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
 
மந்தநிலையை எதிர்கொண்டு சேமிப்பதும் முதலீடு செய்வதும் உங்கள் நிதி அடித்தளத்தை வலுப்படுத்த முக்கியமானது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக சேமிக்க முயற்சி செய்யுங்கள், குறிப்பாக அவசரகால நிதிக்காக சேமிக்கவும்.
 
வீண் செலவுகளை தவிர்க்க, குறிப்பாக செலவுகளை நிர்வகிக்கத் தொடங்கினால் நன்றாக இருக்கும். நீங்கள் அடிப்படை தேவைகளையும் விருப்பங்களையும் பிரித்து அணுகுவது நல்லது.
 
முன்பு குறிப்பிட்டபடி, மந்தநிலைக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் ஒரு வழி, கூடுதல் வருமானத்தைத் தேடுவதாகும். நீங்கள் இதைச் செய்ய பல வழிகள் உள்ளன. உதாரணமாக, உங்கள் சொந்த வணிகத்தைத் திறப்பதன் மூலம். இது நிறைய மூலதனத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் நிலையான மற்றும் நம்பிக்கையுடன் இருக்கும் வரை, எந்தவொரு வணிகமும் ஒரு நல்ல மாதாந்திர வருவாயை உருவாக்க முடியும்.
 
The Bottom Line
 
ஒட்டுமொத்தமாக, பொருளாதார மந்தநிலை என்பது தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு ஒரு சவாலான மற்றும் பெரும்பாலும் வேதனையான அனுபவமாகும். மந்தநிலையின் விளைவுகளைத் தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவை ஏற்படாமல் தடுப்பதில் கவனம் செலுத்துவதே சிறந்த அணுகுமுறையாகும். பொறுப்பான பொருளாதாரக் கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலமும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், எழக்கூடிய எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்வதில் நமது பொருளாதாரம் நிலையானதாக இருப்பதை உறுதிசெய்ய உதவ முடியும்.
Posted in True Facts on March 01 2023 at 04:09 AM

Comments (0)

No login