Backdrawer

Other Entries

Do you start financial planning? | Strategies

ஒருவர் வருமானம் ஈட்டுதல், செலவு செய்தல், சேமிப்பு, முதலீடு மற்றும் பாதுகாப்பு போன்ற தனிப்பட்ட நிதி நடவடிக்கைகளை திட்டமிட்டு நிர்வகிக்கும் செயல்முறையாகும். ஒருவருடைய வருமானத்தின் மூலம் பெரும் பணத்தை நிர்வகிக்கும் செயல்முறையை பட்ஜெட் அல்லது நிதித் திட்டத்தில் சுருக்கமாகக் கூறலாம். இது தனிப்பட்ட நிதி நிர்வாகத்தின் மிகவும் பொதுவான மற்றும் முக்கியமான அம்சங்களை பகுப்பாய்வு செய்யும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நிதிப் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் வழங்குவதற்கான நிதி இலக்குகளை உருவாக்குவதற்கான சில உத்திகளை இந்த ஒரு பதிவில் பார்க்கலாம். 
 
450_50f4f8210bb3702253b4e7a6137d11a6.jpg
 
முதலில் நாம் எதை தெரிந்துக்கொள்ளவது அவசியம், வரி மற்றும் பிடித்தம் போக உங்கள் மாத சம்பளம் எவ்வளவு என்பதை துல்லியமாக தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
prepare your budget
 
அடுத்து, உங்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசியமற்ற தேவைகள் என்று பிரித்து உங்கள் வருமானத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட்யை உருவாக்கவேண்டும். அதற்கு உங்களுடைய வருமானத்தை 50/30/20 என்ற பட்ஜெட் முறையானது ஒரு சிறந்த நிதி கட்டமைப்பை வழங்க உதவிகிறது. அதாவது, உங்கள் வருமானத்தை 50% பணத்தை வாடகை, பயன்பாடுகள், மளிகைப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து போன்ற வாழ்க்கைத் தேவைகளுக்கும், அடுத்து 30% பணத்தை உணவருந்துதல் மற்றும் துணிகளை வாங்குதல் போன்ற விருப்பச் செலவுகளுக்கும் மற்றும் மீதமுள்ள 20% பணத்தை கடனைச் செலுத்துதல் மற்றும் ஓய்வூதியம் மற்றும் அவசரநிலைகளுக்குச் சேமிப்பது, முதலீடு போன்றவற்றில் ஒதுக்கப்படலாம். 
 
Start using Physical cash
 
நீங்கள் பணத்தை உங்கள் கையிலிருந்து செலவு செய்யுங்கள், அப்போதுதான் பணம் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை அறியலாம். Auto debit, Online transactions போன்ற பயன்பாட்டை முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள். 
 
Reduce your debt
 
முடிந்த வரை உங்கள் கடன்களை நிலுவையில் வைக்காதீர்கள். Credit card மூலம் வாங்கும் கடனை குறைத்துக் கொள்வது அவசியம், Credit card-யின் வட்டி விகிதம் அதிகம். Education loan, Vehicle loan, Home loan போன்ற கடனுக்கு முன்னுரிமை கொடுத்து வட்டி மற்றும் அசல் அதிகமாக செலுத்துங்கள். அதிக கடன் சுமை இருந்தால் உங்களால் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்வது சிரமம். 
 
Good debt and Bad debt
 
அனைத்து கடன்களும் சமமாக உருவாக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். நல்ல கடனுக்கும் மோசமான கடனுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. அடமானம் போன்ற நல்ல கடன், பொதுவாக குறைந்த வட்டி விகிதம், வரிச் சலுகைகள் ஆதரிக்கிறது. கிரெடிட் கார்டு கடன் போன்ற மோசமான கடன்கள், அதிக வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள் இல்லாமல் உங்களைச் சுமைப்படுத்தும். மோசமான கடன் உண்மையில் உங்கள் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும்.
 
Emergency Fund
 
உங்கள் வருமானத்திலிருந்து மாதம் மாதம் உங்களுடைய வருமானத்தை பொறுத்து அதிகமாகவோ, குறைவாகவோ ஒரு குறிப்பட்ட பணத்தை Emergency fund-ஆக சேமித்து வைத்தீருங்கள். அது உங்களுக்கு வேலையில்லாத நேரத்திலோ, அவசர மருத்துவ செலவு, Car மற்றும் Bike ஏற்படும் பழுத்துகளை சரிச்செய்ய அந்த பணமானது அந்நேரத்தில் சூழ்நிலையை சமாளிக்க உதவும். 
 
Reduce online shopping
 
இங்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்வது ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது. ஆன்லைனில் நாம் விரும்பும் அனைத்து விதமான பொருட்களும் எளிதில் கிடைப்பதால் வீட்டிலிருந்துக்கொண்டு Foods, Dress, Electronics, Home appliances and gifts போன்ற பல பொருட்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் order செய்வதால் வீட்டிற்கு வருகிறது. அந்த தளங்களில் தரும் பல இலவச சலுகைகள் நம்மை தினசரி பயன்படுத்தபடாத பல பொருட்களை வாங்க தூண்டுகிறது. அதனை குறைப்பதற்கு Online shopping apps-களை uninstall மற்றும் Logout செய்துவிடுங்கள், நேரடியாக கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்குங்கள். 
 
Credit card trap 
 
Credit card பெரிய debt trap ஆகும். ஆனால் அதனை சரியாக பயன்படுத்த தெரிந்துக்கொண்டால் உங்களால் debt trap இருந்து தப்பிக்கலாம். அதாவது credit card மூலம் வாங்கும் பொருட்களின் கடனை உங்கள் வருமானத்தில் 20 சதவீதத்திற்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், செலுத்த வேண்டிய தேதிக்குள் credit card கடனை அடைத்துவிடுங்கள், வாரம் ஒருமுறையாவது credit card-யின் நிலுவைத்தொகையை சரிப்பார்க்கவும், கடனுக்கான முழுத் தொகையை செலுத்திவிடுங்கள், Minimum amount மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைப்பதை தவிர்க்கவும் ஏனென்றால் credit card வட்டி விகிதம் மிக அதிகம் அது உங்களுக்கு பாதகமாக அமைந்துவிடும். 
 
Buy Insurance 
 
Health care, Life insurance, Long term care insurance இவற்றில் உங்கள் பணத்தை நீண்டக்காலத்திற்கு போட்டுவைப்பதன் மூலம் உங்களுடைய 60 வது வயதிற்கு பிறகு உங்களுடைய மருத்துவ செலவிற்கு இன்சூரன்ஸ் தொகையானது உதவியாக இருக்கும். எதிர்பாராத விதமாக உயிர் இழப்பு நேர்ந்தால் அந்த தொகையானது உங்களுடைய குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும்.  
 
Bottom line  
 
இந்த ஒரு பதிவில் உங்களுடைய நிதி மேலாண்மையை எவ்வகையான உத்திகளை பயன்படுத்தி உங்கள் பணத்தை பிரித்து அமைக்கலாம் என்பதையும், நீங்கள் பணத்தை நல்வழியில் சேமிக்கலாம் என்பதையும், நீங்கள் எவ்வாறு செலவுகளை குறைக்கலாம் போன்ற உத்திகளை தெரிந்துக்கொண்டியிருக்கலாம். இந்த உத்திகள் பெரிதளவில் உங்களுக்கு உதவவிட்டாலும், பணத்தின் மீதான கவனத்தை சற்று அதிகரிக்க செய்துயிருக்கலாம். 
 
Posted in True Facts on February 13 2023 at 07:38 PM

Comments (0)

No login