Backdrawer

Other Entries

Computer Attacks with laser light | It's true ??

சமீபத்திய ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பத் துறையில் தரவுகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், இணைய தாக்குதலிருந்து Mobile, Laptop, Network, server மற்றும் IOT போன்ற சாதானங்களையும் மற்றும் அதில் சேமிக்கப்படும் முக்கிய தரவுகளை பாதுகாக்க, தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களால் புதிய பாதுகாப்பு அம்சங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், புதிய வழிகளில் இணைய தாக்குதல்களை உண்டாக்கமுடியும் என்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. 2021 ஆம் ஆண்டில், வெளியிடப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையில் இணைய தாக்குதலை ஒளி மூலம் ஏற்படுத்த முடியும் என்பதை ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர். மேலும், அதனைப் பற்றிய விரிவான தகவலை பின்வரும் கட்டுரையில் காணலாம்.   
 
450_22e4e122a155e8af999752adac67a188.jpeg
 
டிசம்பர் 2021 இல், ஜெர்மன் நாட்டின் KIT நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை சார்ந்த ஆறு ஆராய்ச்சியாளர்களால் 37 வது வருடந்திர கணினி பாதுகாப்பு பயன்பாடுகள் மாநாட்டில் Laser shark என்ற திட்டத்தன் அறிக்கையை வெளியிட்டனர். அத்திட்டத்தில் எந்தவொரு வெளி உலகம் தொடர்பு இல்லாத கணினியை காற்று இடைவெளி அமைப்பின் மூலம் கணினி தாக்குதலை ஏற்படுத்த முடியும் என்று விவரித்தனர். 
 
Generally hacking method
 
பொதுவாக, ஹாக்கர்ஸ் கணினி தாக்குதலை நடத்த, தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் கணினியில் malicious code அல்லது Hacking செய்ய பயன்படுத்தும் சாதனங்கள் மூலம் பாதிப்பு ஏற்படுத்தும் மற்றும் தரவுகள் திருடப்படும். இந்த மாதிரியான தாக்குதலுக்கு wired அல்லது wireless hacking சாதனம் கணினியுடன் இணைக்கப்பட்டியிருக்க வேண்டும். 
 
The Concept of Laser shark project
 
450_05159a88eb132b45c2df924ace0d2c22.jpg
 
இத்திட்டமானது, தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் நிறுவனத்தின் சாதனத்தை அதிக தூரத்திலிருந்து அதிக தரவுகளை கடத்த அனுமதிக்கிறது. இது இருதரப்பு தகவல் தொடர்புகள் மூலம் நிறுவனத்தின் அலுவலக சாதனங்களில் பொருத்தப்பட்டு உள்ள LED- களை ரகசிய சேனலாக பயன்படுத்துகிறது. LED ஒளியை உமிழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் சாதனங்களில் உள்ள LED-யின் மேல் அதிக அதிர்வெண் கொண்ட லேசர் ஒளியை செலுத்துவதன் மூலம் அதன் Firmware கட்டுப்பாட்டை பெறமுடியும். குறிப்பாக, இதன் மூலம் சாதனத்தின் உபகரணங்களை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மென்பொருளை முழுவதுமாக தொலைவிலிருந்து இயக்க முடியும். இதில் தரவுகளை கடத்துவதற்கு காரணமாக இருப்பது, தற்போதுள்ள LED-கள் சாதனங்களின் I/O interface-வுடன் இணைக்கப்பட்டியிருப்பதால் இந்த இருதரப்பு சேனல் பயன்படுத்தி Firmware மூலம் தரவுகளை அனுப்பவும் மற்றும் பெறவும் முடிகிறது. 
 
Conclusion 
 
இது மாதிரியான கண்டுபிடிப்புகள் இரு விதமான விளைவுகளை அளிக்கிறது. ஒன்று, இதுபோன்று கண்டுபிடிப்புகள் மூலம் தாக்குதலுக்கான வழிகளை சரி செய்து தரவுகளை பாதுகாப்பிற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தலாம்.  மற்றொரு, இந்த கண்டுபிடுப்பு தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பிற்கு மிக பெரிய அச்சமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  
Posted in True Facts on January 17 2023 at 07:15 PM

Comments (0)

No login