Vinotharan

Other Entries

Tags

Life History of Anil rai gupta

அனில் ராய் குப்தா 

 
450_5f628ecc851e1ae02034122c5a56d2ae.jpg
 
இவர் ஹாவெல்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 
 

பிறப்பு 

 

450_e21c77c857987cd51f8a1ebaf5fbbdce.jpg
 
450_e29bd38f63519f6eea4d9fdaf0916ecc.jpg

இந்தியாவின், டெல்லியில் 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று கிமாத் ராய் குப்தா மற்றும் வினோத் குப்தா ஆகிய இருவருக்கும் மகனாக பிறந்தார். இவரின் தந்தை  கிமாத் ராய் குப்தா அவர்கள் ஹாவெல்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்.  
 

கல்வி 

அனில் அவர்கள் டெல்லியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளி அவரது பள்ளிபடிப்பை முடித்த அவர், ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பிறகு, வடகரோலினா உள்ள வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங் மற்றும் ஃபைனான்ஸ் பிரிவில் MBA முடித்தார். 

ஆரம்பக்கால வாழ்க்கை 

அனில் அவர்கள் அவரது படிப்பை முடித்த பிறகு, 1992 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் நிறுவனத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக சேர்ந்தார். இவர் நிறுவனத்தின் பல்வேறு வெற்றிகளுக்கும், வளர்ச்சிக்கும் அனில் அவர்களின் பங்கு இருந்துள்ளது, அதில் ஒன்றை குறிப்பிடும்படி, ஐரோப்பிய லைட்டிங் நிறுவனமான சில்வேனியாவை ஹேவல்ஸ் கையகப்படுத்துவதற்கும், ஹேவெல்ஸ் சில்வேனியாவாக மறுகட்டமைப்பதற்கும் அவர் தலைமை தாங்கினார். 

 

தொழில் 

2014 ஆம் ஆண்டில், அனில் அவர்கள் ஹேவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். இவர் நிறுவனத்தின் மின் நுகர்வோர் சாதனங்களின் பிரிவுகளை விரிவுபடுத்துவதிலும் அதன் பிராண்ட் அங்கீகாரத்தை மேம்படுத்துவதிலும் அவர் முழுமையான செயலப்பட்டை கொண்டுயுள்ளார். 
 

தனிப்பட்ட வாழ்க்கை 

 

450_83155c90ec037c6db08c50940474faae.jpg
 
அனில் அவர்கள் சங்கீதா என்ற பெண்ணை மணந்தார், இருவருக்கும் அபினவ் என்ற மகனும் மற்றும் ஆராதனா என்ற மகளும் உள்ளனர். 
 

விருதுகளும் மரியாதைகளும் 

குப்தா ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்.

 

2016 ஆம் ஆண்டு அனில் அவர்கள் தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக ( ஹாவெல்ஸ்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் கிமாத் ராய் குப்தா) எழுதி வெளியிட்டார். 

 

450_b5ec8a81e745cbc119dbc837269d11d1.jpg

 

2017 ஆம் ஆண்டு வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகம் கெளரவ "டாக்டர் பட்டம்" வழங்கியது.

 

2017 ஆம் ஆண்டின் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் வளர்ந்து வரும் வணிகத் தலைவர் விருது.

 

FY 2017-2018 இல், அனில் ராய் குப்தாவும் இந்த ஆண்டின் ET குடும்ப வணிகத்திற்கான விருதைப் பெற்றுள்ளார்.

 

2019 ஆம் ஆண்டிற்கான தொழில்முனைவோராக" ஃபோர்ப்ஸ் இந்தியா "ஃபோர்ப்ஸ் இந்தியா லீடர்ஷிப் விருது" வழங்கப்பட்டது.

 

2019 & 2020 ஆம் ஆண்டுகளுக்கான பிசினஸ் டுடேயின் "சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக நுகர்வோர் டுராபலே பிரிவில் விருது" வழங்கப்பட்டது. 
 

சொத்து மதிப்பு 

Forbes இதழ், வெளியிட்ட 2021 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தோராயமாக US$ 7.6 பில்லியன் அளவிலான மதிப்பைக் கொண்டு 24 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
Posted in Biography on December 04 2021 at 03:24 AM

Comments (0)

No login