Backdrawer

Other Entries

Mobile revolution| Brief explanation

இன்றைய நாட்களில், சாதாரணமாக நாம் அனைவரது கையிலும் Smart Phones உள்ளன. அவை Fold, Flip, Curved display, High resolution போன்ற பல விதமான அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகளையும் கொண்டுயுள்ளன. அதற்கு ஏற்றவாறு காலப்போக்கில் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துள்ளது. அது ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்த எளிமையாகவும்,  வேகமாகவும், மற்றும் தொலைத்தொடர்பிலும் முக்கிய பங்குவகிக்கிறது. ஸ்மார்ட் ஃபோன்கள் முன்புபோல் இல்லாத அளவிற்கு உலகளவில் பல கோடி பில்லியன் அளவிலான சந்தை மதிப்பை அது கொண்டுயுள்ளது. அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்மார்ட் ஃபோன்களின் ஆரம்பக்காலத்தின் படிப்படியாக வளர்ச்சி மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் எவ்வாறு மேம்பாடுயடைந்தது பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம். 
 
The 1st Mobile phone
 
450_30ef1d879308b699767b9e61245c1742.jpeg
 
Motorola நிறுவனத்தின் நிறுவனர் Martin Cooper மற்றும் அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த John. F. Mitchell ஆகிய இருவரும் சேர்ந்து 1973 ஏப்ரல் 3 அன்று DynaTac என்ற முதல் மொபைல் ஃபோன் மாதிரியை பயன்படுத்தி காட்டினார். அதன் பிறகு,1979 யில், முதல் தலைமுறை (1G) Analog cellular நெட்வொர்க் சேவையானது தொடங்கிய நிலையில், 1983 மார்ச் 6, Motorola நிறுவனம் DynaTac 8000X என்ற வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய முதல் மொபைல் ஃபோன்யை வெளியிடப்பட்டது. இது மொபைல் ஃபோன் புரட்சிக்கு ஆரம்பமாக அமைந்தது. 
 
Early generation of Mobile phone
 
450_22fb07df99baefd6e60162eadb651434.jpg
 
1990 பிறகு, 2G இரண்டாம் தலைமுறை Digital cellular network சேவை அறிமுகமானது. அதற்கு ஏற்றவாறு மொபைல் Analog cellular-லிருந்து Digital cellular க்கு மாறியது. காரணம், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் Analog மொபைல்களை பயன்படுத்துவதில் சிரமமாக கருதினார். ஃபோன் எடை அதிகம், குறைந்த Battery life, மிகக்குறைந்த நேரம் மட்டுமே பேசமுடியும் மற்றும் காத்திருப்பது போன்றவற்றால் Mobile phone தயாரிக்கும் நிறுவனங்கள் மொபைலின் வடிவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை அமைத்து அடுத்த தலைமுறைக்கான மொபைல்களை உருவாக்கினார். 
 
உலக சந்தையில் GSM மற்றும் CDMA ஆகிய இரண்டு நெட்வொர்க்கள் ஆதிகம் செலுத்தியபொது, 1993 யில், IBM Simon என்ற உலகின் முதல் 2G நெட்வொர்கில் செயல்படக்கூடிய Smart Phone-யை அறிமுகப்படுத்தியது. அந்த மொபைலில் Touch screen, keyboard, Address book, calendar, calculator, clock, notepad, email மற்றும் 1.8 mb memory card போன்றவை இருந்தன. அந்த மொபைல் எடை 200grms ஆக இருந்தது. 2G அமைப்பு வந்த பிறகு தான் மொபைலில் நிறைய மாற்றங்கள் மற்றும் புதிய அம்சகள் கொண்டுவரப்பட்டன.
 
1993 யில், மொபைல்களில் SMS கொண்டுவரப்பட்டு, ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு முதல் முறையாக text messaging அனுப்பப்பட்டது. Video, Audio, image ஆகியவற்றை பார்ப்பதற்கான அம்சங்கள் வந்தன. 1999 யில், NTT DOCOMO என்ற ஜப்பான் நெட்வொர்க் நிறுவனம் மொபைல்க்கு முதல் முழு இன்டர்நெட் சேவை வழங்கியது. அதன் பிறகு, முதல் பதிவிறக்கம் செய்யக்கூடிய தரவுகளை கொண்டுவந்தனர். அதனை தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டில், மொபைல் வழியாக விளம்பரங்கள் மற்றும் தலைப்பு செய்திகள் வெளியிடப்பட்டன. 
 
Early 20s 
 
2000 ஆம் ஆண்டில், மூன்றாம் தலைமுறை 3G நெட்வொர்க் அறிமுகமானது, அது wirelessதொழில்நுட்பத்தை பயன்படுத்துவந்தால், 2G- யை ஒப்பிடுகையில் 3G-யின் இன்டர்நெட் வேகம் மற்றும் தரவு பரிமாற்றத்தின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால், ஜப்பான், வட கொரியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகள் வணிக ரீதியான 3G நெட்வொர்க் சேவையை வழங்கியது. 3G அமைப்பானது, மொபைல் ஃபோன் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. 
 
உலகளவில் மக்கள் அனைவரும் சொந்தமாக ஒரு மொபைலாவது வைத்திருந்தனர். மக்கள் மொபைல் ஃபோனை எளிமையாக பயன்படுத்துவதற்கு பல நமக்கு பரிச்சியமான Nokia, Ericsson, LG, Blackberry, apple, google மற்றும் Samsung போன்ற பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சொந்த OS-களை அறிமுகப்படுத்தினர். அதில் Nokia சிம்பியன் OS அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களில் வெற்றியைக் கண்டது, முதலில் அவர்களின் தனிப்பட்ட அமைப்பாளர்களுக்காக சியானால் உருவாக்கப்பட்டது, மேலும் இது 2000 களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் OS ஆகும். ஆரம்பத்தில், நோக்கியாவின் சிம்பியன் ஸ்மார்ட்போன்கள் அந்த நேரத்தில் Windows Mobile மற்றும் BlackBerry சாதனங்களைப் போலவே Eseries உடன் வணிகத்தில் கவனம் செலுத்தின. 2002 ஆம் ஆண்டு முதல், Nokia நுகர்வோரை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது, இது பொழுதுபோக்கு மையமான Nseries மூலம் பிரபலப்படுத்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு வரை, சிம்பியன் தான் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் இயங்குதளமாக இருந்தது.
 
அந்த நேரத்தில் இருக்கும் Feature phone OS, தகவல் தொடர்பு மற்றும் அடிப்படை செயல்பாடுகளுக்கு போதுமானதாக இருந்தது தவிர, கூடுதல் பணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை, மேலும் குறைந்த பயன்பாடு  மற்றும் பிற காரணிகளால், அவை ஒருபோதும் செழிப்பான மென்பொருள் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவில்லை. மாறாக, 2010யில், iphone OS மற்றும் Android OS ஆகிய இரண்டும் ஒரு வலுவான OS ஆக வடிவமைக்கப்பட்டது, மூன்றாம் தரப்பு மென்பொருளைத் தழுவி, எதிர்கால நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்பணி மற்றும் கிராபிக்ஸ் திறன்கள் போன்ற திறன்களைக் கொண்டுள்ளது.
 
Feature phone
 
450_7fd60ad372179d8023ae22125a09ec25.jpg
 
2000 களின் நடுப்பகுதியில், flip-phone Motorola Razr, Sony Ericsson W580i மற்றும் LG Black Label போன்ற சிறந்த விற்பனையான feature phones wireless வழங்குநரின் வரம்பில் இடைப்பட்ட விலையை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், அவை உருவாக்கியது.m BlackBerry smartphone சில்லறை விற்பனையின் பெரும்பகுதி வணிக பயன்பாட்டிற்கான முக்கியமானதாக கருதப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, வட அமெரிக்காவின் சந்தையில் ஸ்மார்ட்போன்கள் குறைவாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில், யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள மொபைல் போன்களில் 60 சதவிகிதம் feature phone இருந்தன, மற்றும் 70 சதவிகித மொபைல் போன்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டன.
 
இது 2012 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 46.5 சதவீத லாபத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, அதே சமயம் 210 மில்லியன் feature phones விற்கப்பட்டன, 2013 இல், உலகளவில் 225 மில்லியன் smartphones விற்பனை செய்யப்பட்டன. 2013 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொபைல் போன் விற்பனையில் 51.8 சதவீதத்தை smartphones பெற்றுள்ளன, இதன் விளைவாக ,smartphone விற்பனை முதல் முறையாக feature phone விற்பனையை விஞ்சியது. இது smartphone-களில் முதல் முறையாகும். 
 
Smartphone
 
450_c4a2ca1fff6f94df3b64ab1abc9d065f.jpeg
 
2007-யில், Apple நிறுவனம் iphone-யை அறிமுகப்படுத்தியது. அந்த iphone-யில் Multi touch screen, Gestures, Photos, Maps and Safari browser போன்ற பல அம்சங்கள் கொடுக்கப்பட்டது. பின்னர், Apple அடுத்து Software update-யில் third party செயலிகளை பயன்படுத்துவதற்கும் மற்றும் பதிவிறக்க செய்வதற்கும் App Store-யை கொண்டுவந்தது. Apple நிறுவனத்தை தொடர்ந்து, Google நிறுவனம் 2008 யில், Linux அடிப்படையாக கொண்டு Android OS-யை HTC நிறுவனத்துடன் சொந்த HTC Dream என்ற முதல் Android smart phone -யை வெளியிட்டது. அந்த Android phone-யில் Touch screen-யுடன் கூடிய keyword மற்றும் Open source OS வுடன் இருந்தது. 
 
HP, Black berry, LG, Mocrosoft போன்ற நிறுவங்கள் சொந்த OS-யை அவர்கள் Smartphone-களில் வெளியிட்டனர். காலப்போக்கில், iOS மற்றும் Android OS-களின் வளர்ச்சி மற்ற OS-களை உலக சந்தையிலிருந்து வெளியேறியது. அனைத்து smartphone-களிலும் Google நிறுவனத்தின் Android OS பயன்படுத்தப்பட்டது. iphone தவிர, ஏனென்றால் iOS வளர்ச்சியும் Android OS-க்கு நிகர் இருந்தது. iOS, iphone மட்டுமே பயன்படுத்தப்பட்டது.   
 
Boom of the smartphone (2010-2020)
 
உலக சந்தையில் Android phone மற்றும் iphone பெரும் ஆதிக்கத்தை செலுத்தியது. அதனைத் தொடர்ந்து, Smartphone-களின் highly efficiency (CPU processor, RAM and ROM), Display(IPS, LCD, LED, QLED), Screen resolution(HD, Full HD, 2k, 4k,8k), High quality camera, Media device, High refresh rate touch screen, High speed Wi-Fi module and internet access, Efficient battery and fast charger போன்ற பல அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் Smartphone-களில் கொண்டுவரப்பட்டன. வாடிக்கையாளருக்கு ஏற்றவாறு Smartphone-களின் தொழில்நுட்பங்கள் புதிகாக மேம்பட்டுவருகிறது. 
 
2022 அறிக்கையின் படி, உலகளவில் 15 பில்லியன் Smartphones பயன்படுத்தபடுகிறது. அது 2025 ஆம் ஆண்டிற்குள் 18 பில்லியன் அளவிலான Smartphones பயன்படுத்தபடும் என்று கூறப்படுகிறது. தற்போது, மக்களிடையே பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கும் மொபைல் ஃபோன் நிறுவங்கள் Samsung, Iphone, Xiaomi, Huawei, Google pixel, Asus, Oneplus, Oppo, Sony போன்ற பல பிராண்ட்ஸ் உள்ளன. 
 
Posted in True Facts on December 18 2022 at 05:52 PM

Comments (0)

No login