Vinotharan

Other Entries

Life History of Kushal Pal Singh

குஷால் பால் சிங்

 
450_2254db9954a965da45e72f91468fdab0.jpg
 

பிறப்பு 

இந்தியாவின், உத்தரபிரதேசம் உள்ள புலந்த்ஷாஹரில் 1931 ஆம் ஆண்டு 15 நவம்பர் அன்று  சவுத்ரி முக்தார் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை சவுத்ரி முக்தார் சிங் புலந்த்ஷாஹரில் புகழ்பெற்ற வழக்கறிஞர். 
 

கல்வி

குஷால் பால் சிங் அவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு, அவர் இங்கிலாந்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் (Aeronautical Engineering) படித்தார். 
 

ஆரம்பக்கால வாழ்க்கை 

 
450_9162f6ba71227a839c874e8809014278.jpeg
 
 
இவரின் படிப்பு முடிந்த பிறகு, இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அதிகாரிகள் சேவைகள் தேர்வு வாரியத்தால் இந்திய இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
பின்னர், 1960 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்கன் யுனிவர்சல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார்.
 
மேலும் 1979 ஆம் ஆண்டில் DLF யுனிவர்சல் லிமிடெட் உடன் இணைந்த பிறகு, அவர் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனராகவும் இருந்தார். 
 

அவர் பல அரசு மற்றும் அரசு சாரா குழுக்கள் மற்றும் வாரியங்களுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார், அவர் வர்த்தக மற்றும் தொழில்துறை மற்றும் PhD சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் (PhD Chambers of Commerce) ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

450_ae17f5eec18faf95d67890834e9be6e2.jpeg
 
தற்போது, பல்வேறு துறைகளில் சுமார் 31 வணிக நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அந்த பதவியில் இருந்த சிங், ஜூன் 2020 இல் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவர் இப்போது DLF இன் எமரிட்டஸ் தலைவராக உள்ளார். 
 

தனிப்பட்ட வாழ்க்கை 

குஷால் பால் சிங் அவர்கள் இந்திரா என்ற பெண்ணை மணந்தார். இருவருக்கும் ராஜீவ் என்ற மகனும், ரேணுகா மற்றும் பியா என்ற இரு மகள்களும் உள்ளனர்ராஜீவ் சிங் 2020 இல் DLF குழுமத்தின் தலைவராக ஆனார். இளைய மகள் பியா சிங் DLFயில் முழுநேர இயக்குநராக உள்ளார். மூத்த மகள் ரேணுகா, DLF லிமிடெட் நிறுவனத்தில் செயல் அல்லாத இயக்குநரான G.S. தல்வாரை மணந்தார்.
 

விருதுகளும் மரியாதைகளும் 

 
450_240f03f2e056f5af40dad43d10906069.jpg
 
GB pant வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இந்தியன் பிசினஸ் ஸ்கூல், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவற்றால் அவரது சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டது. 
 
2011 ஆம் ஆண்டில் அவர் ஆசிய விருதுகளில் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருதைப் பெற்றார்.
 
டெல்லியின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பிற்காக டெல்லி அரசாங்கத்தால் "டெல்லி ரத்னா விருது" வழங்கப்பட்டது.
 
கடந்த இரண்டு தசாப்தங்களாக தில்லியில் மொனாக்கோவின் கெளரவ தூதர் ஜெனரலாகப் பணியாற்றியதற்காக, 2010 ஆம் ஆண்டு, செயின்ட் சார்லஸின் ஆணை அதிகாரியின் அலங்காரம் வழங்கப்பட்டது. 
 
2010 ஆம் ஆண்டு இந்திய அரசால் "பத்ம பூசன் விருது" வழங்கப்பட்டது.
 
2008  ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இதழால் உலகின் எட்டாவது பணக்காரராகவும் அங்கீகரிக்கப்பட்டது.
 
2008 ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பிற்காக NDTV வழங்கிய சிறப்பு விருது.
 
2000 ஆம் ஆண்டில்,  இந்திய அரசால் "சம்மன் பத்ரா விருது" வழங்கப்பட்டது. 
 

சொத்து மதிப்பு 

Forbes இதழ், வெளியிட்ட 2021 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தோராயமாக US$  8.7 பில்லியன் அளவிலான மதிப்பைக் கொண்டு 23 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
Posted in Biography on December 01 2021 at 02:59 AM

Comments (0)

No login