Backdrawer

Other Entries

Internet era

இணையம் பல்வேறு காலநிலைகளில், மேம்படுவதற்காக கொண்டுவரப்பட்ட மற்றங்களாக இருக்கட்டும், இணைய பாதுகாப்பிற்காக உருவான புதுபுது கண்டுபிடிப்புகளாக இருக்கட்டும் இவை அனைத்து ஒவ்வொரு காலநிலைகளிலும் இணையத்தில் ஏற்ப்பட்ட ஒரு குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் சிறப்பியலபுகள் பெற்றுயுள்ளது. இன்றைய நாட்கள் வரை, தொடர்ந்து இணையத்தில் பதிய சம்சங்கள், பாதுகாப்பு நெறிமுறைகள், வேகம், மற்றும் அதனின் தேவை மேம்பட்டுக்கொண்டே வருகிறது. அந்த சகாப்த்தை சுருக்கமாக சில காலநிலை பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.
 
450_27230f26f3f8fbf55ddfa44ce7316276.png
 
Brief of Early Internet
 
ISP சந்தாவிற்கு பணம் செலுத்தும் எவருக்கும் இணைய இணைப்பு கிடைக்கப்பெற்றபோது, தேசிய நெட்வொர்க்குகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மங்கலாயின. circuit switching போன்ற சில பழைய தொழில்நுட்பங்கள் fast packet switching போன்ற புதிய பெயர்களுடன் மீண்டும் வெளிவந்துள்ளன. அது தற்போதுள்ள இணையத்தை முழுமையாக்குவதற்கு ஆராய்ச்சியாளர்கள் சில சோதனை நெட்வொர்க்குகளை உருவாக்கியுள்ளனர்.
 
CSNET என்பது யு.எஸ். நேஷனல் சயின்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் நிதியளிக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பாகும். இது 1981 இல் செயல்படத் தொடங்கி, நேரடியாக இணைக்க முடியாத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் கணினி அறிவியல் துறைகளுக்கு நெட்வொர்க்கிங் நன்மைகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம்.
 
ARPANET க்கு, நிதி அல்லது அங்கீகார வரம்புகள் கொண்டியிருந்த காரணமாக, இது தேசிய நெட்வொர்க்கிங் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும், அணுகுவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது மற்றும் உலகளாவிய இணையத்தின் வளர்ச்சிக்கான பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.
 
NSFNET, பல நாடு தழுவிய நெட்வொர்க்குகளுக்கு முதுகெலும்பாக இருந்தன. அதன் திறன் படிப்படியாக, 56 kbit/s, 1.5 Mbit/s மற்றும் 45 Mbit/s வேகத்தில் இயங்கியது. அவை 1985 முதல் 1995 வரை செயல்ப்பட்டது. அது National Science Foundation-னால் உருவாக்கப்பட்டன.
 
அதன்பிறகு, Internet2 என்ற ஆராய்ச்சி மற்றும் கல்வி சமூகங்கள், தொழில்துறை மற்றும் அரசாங்கத்தின் உறுப்பினர்களால் வழிநடத்தப்படும் ஒரு இலாப நோக்கற்ற யுனைடெட் ஸ்டேட்ஸ் கணினி நெட்வொர்க்கிங் கூட்டமைப்பு உருவானது. 
 
1998 ஆம் ஆண்டில், இந்த இன்டர்நெட்2 சமூகம், க்வெஸ்டுடன் இணைந்து, அபிலீன் என்று அழைக்கப்படும் முதல் இன்டர்நெட்2 நெட்வொர்க்கை உருவாக்கியது. 
 
2003 செப்டம்பரில், நேஷனல் லாம்ப்டா ரெயில்  தொடங்கப்பட்டது. இது அமெரிக்க ஆராய்ச்சி மற்றும் கல்வி சமூகத்திற்கு சொந்தமான,12,000 மைல் ஃபைபர்-ஆப்டிக் மூலம் அதிவேக தேசிய கணினி வலையமைப்பு ஆகும், முதல் கண்டம் கடந்த 10 Gigabit ஈதர்நெட் நெட்வொர்க் ஆகும். இது 1.6 Tbit/s மற்றும் அதிகபட்சம் 40 Gbit/s வேகத்தில் இயங்குகிறது. அதன் பிறகு, பெரிய மேம்படுத்தல் ஒருபோதும் நடக்கவில்லை என்பதால் மார்ச் 2014 இல் NLR செயல்பாடுகளை நிறுத்தியது.
 
2006 ஆம் ஆண்டில், இன்டர்நெட்2 ஒரு புத்தம் புதிய நாடு தழுவிய நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த, லெவல் 3 கம்யூனிகேஷன்ஸுடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்தது, அதன் திறனை 10 Gbit/s லிருந்து 100 Gbit/s ஆக உயர்த்தியது. பின்னர் 2007 இல், இன்டர்நெட்2 அதிகாரப்பூர்வமாக அபிலீனை ஓய்வு பெற்றது.
 
Web 1.0 (1st Generation)
 
இணையம் முதன்மையாக அராசங்க அமைப்பு பயன்பாட்டிற்காக மட்டுமே இருந்தது. இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டிருந்தது. இதன் விளைவாக, 1980 களின் பிற்பகுதியில், முதல் இணைய சேவை வழங்குநர் (ISP) நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன மற்றும் UUCP அடிப்படையிலான email மற்றும் Usenet செய்திகளை பொதுமக்களுக்கு வழங்க உருவாக்கப்பட்டன. 1989 ஆம் ஆண்டு நவம்பரில், அமெரிக்கா, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த உலகின் முதல் வணிக dialup ISP "The World" ஆகும். 
 
1990 களில்,  PSTNET, ALTERNET, CERFNET மற்றும் பல புதிய நெட்வொர்க் சேவை வழங்குனர் (NSP) வணிக வாடிக்கையாளர்களுக்கு நெட்வொர்க் பயன்படுத்த வழங்கினார். 1995 க்கு பிறகு, National Science Foundation NSFNET க்கு நிதியளித்தலை நிறுத்திக்கொண்டது. அதற்கு மாறாக VBNS நெட்வொர்க் சேவைக்கு நிதியுதவி அளித்தது. 
 
பொது இணையத்தின் முதல் தசாப்தத்தில், 2000 களில், அது இறுதியில் செயல்படுத்தும் மகத்தான மாற்றங்கள் இன்னும் புதிதாக இருந்தன. அந்த காலகட்டத்தில், smart phone, laptop, computer மற்றும் பிற சாதனங்கள் பொதுமக்கள் அனைவராலும் வாங்குவதற்கான வசதிகள் இல்லை. குறிப்பிட்ட மக்களால் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அப்போது எல்லாம்  Media Storage க்கு DVD, Floppy disc, CD பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவை data-வை store செய்வதற்கு பொதுமான Analog tape-யிலிருந்து Digital Optics Disc-க்கு மாறியது. 
 
2000 களின் முற்பகுதியில், PHP, Java script, Java, Ajax, Html, CSS மற்றும் பல்வேறு software frameworks இணைய மேம்பாட்டின் வேகத்தை எளிமை ஆக்கியது. mail, blogs, e-commerce இணையதளங்கள் மற்றும் personal இணையதளங்கள் ஆகியவை இணையத்திற்குள் வந்தன. அவை தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் இருந்து படிப்படியாக உலகளாவிய சமூகத்தின் உள்கட்டமைப்பின் முக்கிய பகுதியாக வளர்ச்சியடைய தொடங்கியது. 
 
இந்த Web முதல் தலைமுறையின் சகாப்த இணையாதங்களில் Sever side dynamic programming language, Dynamic Html page, Databases, Html 3.2 structure, Create page layouts, Graphics, GIF buttons மற்றும் mail feedback mechanism ஆகிய இவை அனைத்தும் உருவானது. 
 
1997 லிருந்து 2001 வரையிலான காலகட்டத்தில், Top level domain என்ற சொல்லக்கூடிய .com வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அதன் பங்கு மதிப்பு வேகமாக உயர்ந்தது. அதன் பிறகு, 2004 யில், அடுத்த தலைமுறைக்கான இணையத்தின் காலம் விரைவில் உருவதற்கான சத்தியாக்கூறுகள் இருந்தன. 
 
Web 2.0 (2nd Generation)
 
2004 பிற்பகுதியில், Tim O'Reily மற்றும் Dale Dougherty "Web 2.0" என்பதை பற்றி முதலில் conference யில் பேசினார்கள், 2005 யில், Computer, Mobile போன்ற சாதனங்கள் உலக முழுவதும் பிரபலமாகவும், மக்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டு சதாரணமாக பயன்படுத்தப்பட்டது. 
 
Storage தொழில்நுட்பமான RAM மற்றும் ROM ஆகியவை வளர்ச்சியடைய தொடங்கின. 
 
ROM : Floppy discs-யிலிருந்து Hard drivesக்கு மாறியது. அது சிறிதாகவும், அதன் storage திறன் MB-யிலிருந்து GBக்கும், TBக்கும் வளர்ந்தது. 
 
RAM : அது 100KB -யிலிருந்து GB க்கு மாறியது, TCP/IP, ethernet போன்ற தொழில்நுட்பத்தால் பொதுவான வேகமான KB -யிலிருந்து ஒரு வினாடிக்கு MB களாகவும், ஒரு வினாடிக்கு GB களாகவும் மாறியது. 
 
அதிவேக இணையம், அனைவராலும் பயன்படுத்தக்கூடிய குறைந்த விலையில் அதிக நம்பிக்கையான மற்றும் அனைத்து இடங்களிலிருந்து இணையத்தை பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு வளர்ந்தது. படிப்படியாக, சமூக ஊடங்களான Twitter, Facebook, yahoo போன்ற வலைதளங்கள் தோன்றின. அதன்பிறகு, Mobile வளர்ந்த காலகட்டத்தில், இணையத்தை அதிகளவில் மக்கள் பயன்படுத்த தொடங்கின.  எல்லா வயதினருக்கும், பெரும்பாலான மனித சமூதாயத்தினருக்கு அவர்களின் அன்றாட வாழ்வில் இணையத்தை பயன்படுவதற்கான சூழலாக மாறியது. 
 
Computer-யில் storageகளுக்கு SSD பயன்படுத்தப்பட்டது. அது கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரித்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டு திறனை வேகமானதாக மாற்றியது. 
 
Mobile மற்றும் Embedded devices சந்தையில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக ARM architecture தொழில்நுட்பத்தை chipகளில் பயன்படுத்தப்பட்டது. ARM விலை குறைவாகவும், அதிக செயலாக்க திறனையும் கொண்டியிருந்தது. 
 
Window desktop software Application -லிருந்து Mobile Application-க்கு மாறியது. Mobile app இன்னும், மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அதிக பயனர்களையும் ஈர்த்தது. பொதுமக்கள் மற்றும் தனிநபர்கள் செய்யும் voice, text, share, video, picture போன்ற பல விசியங்களால் ஊடங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் உங்களுக்காக உங்கள் வணிகத்தை உருவாக்கின்றனர். இதற்கு, பிரபலமான செயலிகள் உள்ளன. அதற்கு எடுத்துக்கட்டாக: Instagram, Facebook, Youtube மற்றும் Linkedin போன்ற பல. 
 
இணையமானது தொழில்நுட்பம், பல்வேறு வணிகத்துறை, புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல விதத்தில் வளர்ச்சியடைய முக்கிய காரணமாக உள்ளது. இந்த இணையத் தொழில்நுட்பத்தின் தொடர் வளர்ச்சி நாம் அனைவரையும் Web 3.0 க்கு ஈர்க்கிறது. 
Posted in True Facts on December 11 2022 at 07:43 PM

Comments (0)

No login