Vinotharan

Other Entries

Life History of Ashwin Dani

அஷ்வின் டானி

 
450_653f6e6d61827f45949ed1284b3da26b.jpg
 

பிறப்பு 

இந்தியாவின், மும்பையில் 1943 ஆம் ஆண்டு சூர்யகாந்த் டானி என்பவருக்கு அஷ்வின் மகனாக பிறந்தார்.  அஷ்வின் அவர்களின் தந்தை ஏசியன் பெயிண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர். 
 

கல்வி 

அஷ்வின் டானி, பம்பாய் பல்கலைக்கழகத்தில் பெயிண்ட்ஸ், வார்னிஷ் மற்றும் பிக்மென்ட்ஸ் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற பட்டம் பெற்றார். அவரது பட்டப்படிப்புக்குப் பிறகு, அவர் மேல் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்றார். அவர் ஓஹியோவில் உள்ள அக்ரான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், அங்கிருந்து பாலிமர் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தனது எம்.எஸ்.சி.க்குப் பிறகு, டானி நியூயார்க்கில் உள்ள ரென்சீலர் பாலிடெக்னிக்கில் பயின்றார், அங்கிருந்து வண்ண அறிவியலில் டிப்ளமோ பெற்றார். 
 

ஆரம்பக்கால வாழ்க்கை 

அஷ்வின் டானி அவரது படிப்பினை முடித்த பிறகு, 1967 இல் டெட்ராய்டில் வளர்ச்சி வேதியியலாளராக Inmont Corp (இப்போது BASF) சேர்ந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து 1968 இல் ஏசியன் பெயிண்ட்ஸில் மூத்த நிர்வாகியாக சேர்ந்தார். 

ஏசியன் பெயிண்ட்ஸில், பல்வேறு துறைகளில் பணிபுரிந்து, உயர் பதவிகளில் உயர்ந்து, 1997ல் துணைத் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் ஆனார், 2009 வரை அப்பதவியில் இருந்தார். 
 

தொழில் 

ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் 
 
 
450_cee70fc5393dba9fb0b046b1a0013093.jpeg
 
 
1942 ஆம் ஆண்டு   ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தை அஷ்வின் அவர்களின் தந்தை  சூர்யகாந்த் டானி மற்றும் அவரின் நண்பர்கள் சம்பக்லால் சோக்சி, சிமன்லால் சோக்ஸி, அரவிந்த் வக்கீல் ஆகியோரால்  இணைந்து நிறுவப்பட்டது. 
 
அஷ்வின் அமெரிக்கவிலிருந்து இந்தியா திரும்பிய அவர், 1968 இல் ஏசியன் பெயிண்ட்ஸில் மூத்த நிர்வாகியாக சேர்ந்தார். பின்னர், ஏசியன் பெயிண்ட்ஸில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து அவர் 1997 ஆம்  ஆண்டில், துணைத் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் ஆனார். அப்பதவியில் 2009 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். அதன் பிறகு, நிர்வாகமற்ற தலைவராக 2019 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்த அவர், தற்போது நிர்வாகமற்ற இயக்குனராக உள்ளார். 
 
இந்தியாவில் கணினிமயமாக்கப்பட்ட வண்ணப் பொருத்தத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர், இது இப்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
40 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வாழ்க்கையில் அஷ்வின் டானி அவர்கள், ஏசியன் பெயிண்ட்ஸ் அனைத்து வகைகளிலும் சிறந்த விலையில் தயாரிப்புகளை வழிநடத்தினார், இதன் மூலம் பல தசாப்தங்களாக அதன் தடையற்ற ஆதிக்கத்தை உறுதி செய்தார்.
 
பாலிமர்கள், பெயிண்ட்கள் மற்றும் பிளாஸ்டிக் துறைகளில் அவரது அனுபவம் ஆசிய பெயிண்ட்ஸ் ஆசியாவின் மூன்றாவது பெரிய பெயிண்ட் நிறுவனமாகவும், உலகின் ஒன்பதாவது பெரிய நிறுவனமாகவும் மாற உதவியது. அவரது தலைமையின் கீழ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்ற வீட்டு மேம்பாட்டுப் பிரிவுகளில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது - மாடுலர் கிச்சன் பிசினஸ், பாத்ரூம் ஃபிட்டிங்ஸ், சானிட்டரி வேர்கள், வீட்டு அலங்காரம், கை மற்றும் மேற்பரப்பு சானிடைசர்கள், தரை மற்றும் கழிப்பறை கிளீனர்கள்.
 
PPG AP மற்றும் AP PPG ஆகிய இரண்டு கூட்டு முயற்சிகளை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்காற்றினார், இதன் மூலம் ஏசியன் பெயிண்ட்ஸ் வாகனம் மற்றும் தொழில்துறை பூச்சுப் பிரிவுகளில் சிறிய அளவில் முன்னிலையில் உள்ளது.
 
உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிகம் பற்றிய அஷ்வின் டானியின் அறிவும் பொது நிர்வாகத்தில் அனுபவமும் ஏசியன் பெயிண்ட்ஸுக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்திற்க்கு வழி வகுத்தது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக கடனற்றது மற்றும் தற்போது 26 உற்பத்தி வசதிகளுடன் 19 நாடுகளில் செயல்படுகிறது.  
 
அவர் 2004 முதல் 2018 வரை சன் பார்மாவின் குழுவில் ஒரு சுயாதீன நிர்வாகமற்ற இயக்குநராக பணியாற்றினார்.
 

ஹைடெக் குழுமம் (Hitech Group)

ஹைடெக் குழுமனது அஷ்வின் டானி அவர்களால் 1991 ஆம் ஆண்டு  நிறுவப்பட்டது. ஹைடெக் நிறுவனத்திற்க்கு கீழ், 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் கொண்ட  ஹைடெக் கார்ப்பரேஷன் (Hitech Corporation), ஹைடெக் ஸ்பெஷலிட்டிஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (Hitech Specialities Solutions Ltd) மற்றும் ஹைடெக் இன்சூரன்ஸ் புரோக்கிங் சர்வீசஸ் லிமிடெட் (Hitech Insurance Broking Services Ltd). இந்நிறுவனம் 12 நாடுகளில் 2000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது மற்றும் இந்தியாவில் 15 இடங்களில் நாங்கள் செயல்படுகிரது. 
 
 
450_a087b3482e004f56ad07a0c783c7ce69.png
 
 
Hitech Corporation - இந்நிறுவனம் 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது ஒரு முன்னணி திடமான பிளாஸ்டிக் பேக்கேஜிங் (rigid plastic packaging ) உற்பத்தியாளர்.
 
 
Hitech Specialities Solutions Ltd - 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது இந்தியாவில் சிறந்த தனிப்பட்ட வகையான இரசாயனங்கள் விநியோகம் செய்யும் வர்த்தக வணிகம் உள்ளது. 
 
 
Hitech Insurance Broking Services Ltd - 2008 ஆம் ஆண்டு ஹைடெக் நிறுவனத்தில் இணைக்கப்பட்டது. இது கடல் மற்றும் போக்குவரத்து இன்சூரன்ஸ் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனித்துவமான காப்பீட்டு தரகு வணிகமாக செயல்படுகிறது. 
 

தனிப்பட்ட வாழ்க்கை 

450_ef92a71ac471f003d9a2b8db47950398.jpg
 
அஷ்வின் டானி அவர்கள் இனா என்ற பெண்ணை மணந்தார். இருவருக்கும் ஜலஜ்ஹசித் மற்றும் மாலவ் மூன்று மகன்கள் உள்ளனர். இனா டானி அவர்கள் ஹைடெக் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
 
 
450_1037bcdc045b5c96e248810a3dcb6bc0.jpg
 
( Board of Director Mr. malav dani )
 
 
450_fef1234908d1c2f3b3f083f0a75f2d7f.jpg
 
( Board of Director Mr. jalaj dani )
 
இவர்களின் மகன்கள் இருவர்,  ஜலஜ் டானி அவர்கள் ஹைடெக் நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் இயக்குநாராகவும் மற்றும் மாலவ் டானி அவர்கள் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குனராகவும், ஹைடெக் நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் இயக்குநாராகவும் தற்போது உள்ளார். 
 

பெற்ற விருதுகள் 

2017 ஆம் ஆண்டு ஹைதராபாத் மேலாண்மை சங்கம் மற்றும் நிறுவன மேம்பாட்டு மையம் வழங்கிய கிருஷ்ணமூர்த்தி விருது.

 

பிசினஸ் இந்தியா இதழின் 2015 ஆம் ஆண்டுக்கான ‘பிசினஸ்மேன் ஆஃப் தி இயர்’ விருது. 

 

2012 ஆம் ஆண்டின், கலர் சொசைட்டி வாழ்நாள் சாதனை விருது.

 

2011 ஆம் ஆண்டின் இந்திய பெயிண்ட் அசோசியேஷன் (IPA) வழங்கும் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’.

 

2003 ஆம் ஆண்டு நவம்பரில் 'உற்பத்தி' பிரிவில் 'Ernst & Young Entrepreneur of the year' விருது.

 

2003 ஆம் ஆண்டில் கெம்டெக் அறக்கட்டளையின் ‘ஆண்டின் சாதனையாளர் விருது - இரசாயனத் தொழில்’.

 

2002 ஆம் ஆண்டின்  சப்ளை செயினில் சிறந்து விளங்கியதற்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்டின் 'செமினர் விருது'. 
 

சொத்து மதிப்பு

Forbes இதழ், வெளியிட்ட 2021 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் US$ 8.9 பில்லியன் அளவிலான மதிப்பைக் கொண்டு 22 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
Posted in Biography on November 30 2021 at 04:08 AM

Comments (0)

No login