Backdrawer

Other Entries

The Internet | Brief History

நூலகத்தின் அலமாரியில் எவ்வாறு புத்தங்கள் வரிசையாக வைக்கப்பட்டியிருக்கும் நாம் நமக்கு தேவையான புத்தகத்தை எடுத்து படிக்கிறோமோ, அவ்வாறு தான் Internet என்ற இணையம் செயல்படுகிறது. மேலும், இன்டெர்நெட் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் நானும் மகிழ்ச்சியடைக்கிறேன். இதற்கு எடுத்துக்கட்டாக, தற்போது நீங்கள் இந்த படித்துக்கொண்டியிருக்கும் இதே நேரத்தில் நீங்களும் இணையத்தின் வழியாக தான் பயணம் செய்கின்றீகள்.

 

450_a17bc656860f58309378c0e28fc60fb2.jpg
 
 A pioneer of the Internet
 
இன்டர்நெட்யின் முன்னோடியாக கருதப்படும் Packet Switching, 1950-களில் பிற்பகுதிகளில், அமெரிக்க விமானப்படையானது SAGE என்ற ரேடார் பாதுகாப்பு அமைப்பிற்கான நெட்வொர்க்கை பல பகுதிகளில் நிறுவியது. ஆனால், அதிலிருந்த குறைப்பட்டால் விமானப்படையை அணுசக்தி தாக்குதலிருந்து தப்பிக்ககூடிய ஒரு அமைப்பை உருவாக்க முயற்சித்தனர். 
 
1960 களின் முற்பகுதியில், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையால் நிதியாளிக்கட்டு, RAND ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு திட்டத்தில் அமெரிக்க கணினி விஞ்ஞானி பால் பாரான் சிறிய அளவிலான தரவுகளை மாற்றுவதற்கான கருத்து முதன்முதலில் ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சி முடிவில், தொலைத்தொடர்பில் Packet Switching உருவாக்கின்றனர்.
 
பாரான், விமானப்படை முன்முயற்சிக்கு ஆதரவாக, The Concept of Distributed Adaptive Message Block Switching உருவானது. 1961-யில், RAND நிறுவனம் இந்த ஆராய்ச்சி தொடர்பான அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் விளக்கங்கள் தொடர்ந்து அடுத்தெடுத்த ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 
 
இறுதியாக, அந்த அறிக்கையில் பெரிய அளவிலான தகவல் தொடர்பு நெட்வொர்க்கிற்கான பொதுவான கட்டமைப்பு விவரித்தது. அந்த அறிக்கை மூன்று முக்கிய யோசனைகளில் கவனம் செலுத்தியது. ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கு இடையில் பல பாதைகள் கொண்ட பரவலாக்கப்பட்ட நெட்வொர்க்கைப் பயன்படுத்துதல், பயனர் செய்திகள் செய்தித் தொகுதிகளாகப் பிரித்தல் மற்றும் இந்த செய்திகளை சேமித்தல் மற்றும் ஃபார்வார்டு ஸ்விசிங் மூலம் வழங்குதல் உருவானது. இவைதான் உலகெங்கிலும் உள்ள கணினி நெட்வொர்க்களில் தரவுத் தொடர்புகளுக்கு பாக்கெட் ஸ்விட்சிங் முதன்மை அடிப்படையாகும்.      
 
1965 யில், டொனால்ட் டேவிஸ் அவர்கள் கணினி நெட்வொர்க்குகளுக்கான தரவுத் தொடர்களில் ஆர்வம் காட்டினார். அந்த ஆண்டு பிற்பகுதியில், யுனைடெட் கிங்டமில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில், டேவிஸ் அவர்கள் பாக்கெட் ஸ்விட்சிங் அடிப்படையில் தேசிய வணிகத் தரவு நெட்வொர்க்கை வடிவமைத்தார். 
 
1966 யில், கணினியை ஒரு router ஆக பயன்படுத்த முடியும் என்பதை விவரித்தார். ஆனால், இந்த திட்டத்தை தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர், அதிவேக தரவு பரிமாற்றதை நிரூபிக்கும் வகையில் உள்ளூர் நெட்வொர்க்குக்கான வடிவமைப்பை தயாரித்தார்.
 
அனைத்து நெட்வொர்க்கிலுள்ள பாக்கெட் வரிசை மாற்றங்கள் மற்றும் டேட்டாகிராம் இழப்புகள் ஆகியவற்றின் பிழை கட்டுப்பாட்டை பயனர்களுக்கு கொண்டுவர 1967 யில், தரவு பரிமாற்றத்தில் protocol என்ற சொல்லை[ப் பயன்படுத்திய முதல் நபர்களில் அவரும் அவரது குழுவும் ஒருவர். 
 
1968 ஆம் ஆண்டில், டேவிஸ் பலதரப்பட்ட ஆய்வகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் செயல்பாட்டு நிலைமையின் கீழ் தொழில்நுட்பத்தை நிரூபிக்கவும் mark 1 என்ற பாக்கெட் ஸ்விட்ச்ட் நெட்வொர்க்யை வடிவமைத்தார். 
 
NPL, Local Network மற்றும் ARPANET ஆகியவை உலகின் முதசல் இரண்டு நெட்வொர்க்களுக்குள் பாக்கெட் ஸ்விட்சிங்க் பயன்படுத்தியது. 1970 களில் NPL குழு, டேட்டாகிராம் நெட்வொர்க் மற்றும் பாக்கெட் நெட்வொர்க் ஆகியவற்றின் உருவகப்படுத்துவதற்கான வேலையை மேற்கொண்டது மற்றும் Internetworking மற்றும் Network Security பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுப்பட்டது. 
 
1973 யில், இருந்து செயல்ப்பட்ட Mark version 2 யில் Layered Protocol கட்டமைப்பை பயன்படுத்தியது. அதில் 12 கணினிகள் மற்றும் 75 டெர்மினல் சாதனங்கள் இணைக்கப்பட்டன.  
 
ARPANET
 
1966 யிலிருந்து, DRAPA என்ற பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் நிறுவனத்தின் தகவல் செயலாக்க நுட்ப அலுவலகத்தின் தலைவராக இருந்து Robert Taylor அவர்கள் அனைத்து பயனர்களுக்கு ஒரு கணினியிலிருந்து பதில் அளிக்குமாறு விரும்பினார். அவ்வாறு மூன்று வெவ்வேறு இடங்களில் நெட்வொர்க் டெர்மினல்கள் நிறுவப்பட்டு, ஒன்றுடன்வொன்று இணைத்தார். அந்த யோசனை ARPANET ஆகும். அத்தகைய வலையமைப்பை உருவாக்கும் திட்டத்தை அவர் தொடங்கினார். மேலும், ராபர்ட் மற்றும் தாமஸ் மெரில் ஆகியோர் பரந்த பகுதி நெட்வொர்க்குகளில் (WANs) கணினி நேரத்தைப் பகிர்வதை ஆராய்ச்சி செய்து வந்தனர். ராபர்ட், ARPANET Packet Switching-யை இணைத்து வேகத்தை 2.4 Kbps-யிலிருந்து 50 Kbps வரை மேம்படுத்தினார். 
 
1969 யில், அக்டோபர் 29 அன்று, முதல் ARPANET இணைப்புகள் கலிபோர்னியா பல்கலைக்கழகம், லால் ஏஜென்ஸி (UCLA) மற்றும் ஸ்டண்ட்போர்ட் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிக்கு இடையே நிறுவப்பட்டது. ARPANET ஆரம்பகால சர்வதேச ஒத்துழைப்புகள் குறைவாகவே இருந்தன. 
 
பின்னர், 1981 யில், அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்தது. ARPANET ஆனது இன்டர்நெட் ஆக மாறபோகும் தொழில்நுட்ப மையமாகவும், பயன்படுத்தபடும் தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் முதன்மையான கருவியாகவும் ஆனது. 
 
How does the Internet work
 
இணையம் என்பது உலகளாவிய கணினி வலையமைப்பாகும், இது பல்வேறு தரவுகளையும் ஊடகங்களையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சாதனங்களில் கடத்துகிறது. இது Internet Protocol (IP) மற்றும் Transport Control Protocol  (TCP) ஆகியவற்றைப் பின்பற்றும் பாக்கெட் ரூட்டிங் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி செயல்படுகிறது.
 
நீங்கள் எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும் அல்லது எங்கு பயன்படுத்தினாலும், இணையம் முழுவதும் தரவு பரிமாற்றம் சீரானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய TCP மற்றும் IP இணைந்து செயல்படுகின்றன.
 
இணையத்தில் தரவு பரிமாற்றப்படும் போது, அது செய்திகளிலும் பாக்கெட்டுகளிலும் வழங்கப்படும். இணையத்தில் அனுப்பப்படும் தரவு ஒரு செய்தி என்று அழைக்கப்படுகிறது, ஆனால் செய்திகள் அனுப்பப்படுவதற்கு முன்பு, அவை பாக்கெட்டுகள் எனப்படும் சிறிய பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. இந்த செய்திகளும் பாக்கெட்டுகளும் Internet Protocol (IP) மற்றும் Transport Control Protocol  (TCP) ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு மூலத்திலிருந்து அடுத்த ஆதாரத்திற்குச் செல்கின்றன.
 
Importance of internet
 
முன்புபோல் இல்லாமல் இப்போது இணையம் உலகை ஆள்கிறது. அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான முக்கியமான சேவைகள் மற்றும் ஆதாரங்களின் தொகுப்புகளாக இணையம் வழங்குகிறது.

இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் முன்னேற முடியும். இது கணினி வலையமைப்பின் உலகளாவிய அமைப்பாக இருப்பதால், எல்லா இடங்களிலிருந்தும் மக்களை இணைக்கலாம் மற்றும் சமூகங்களை உருவாக்கலாம்.
 
இணையம் தகவல்களை வழங்குவதற்கும் அணுகுவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும், மேலும் இது உலகம் முழுவதும் கிடைக்கிறது. விரைவாகவும், எளிதாகவும், மலிவாகவும் இருப்பதால், உலகெங்கிலும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான சிறந்த வழியாகும், இது செயல்பாட்டில் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மேலும் நீங்கள் இனி தகவலுக்காக நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை, இது இப்போது உங்கள் கணினித் திரைகளில் உலகை சிறியதாக்குகிறது.
 
Future of the Internet
 
இணையத்தின் எதிர்காலம் தற்போது, நாம் பயன்படுத்தும் இணைய வேகத்தை விட மிக அதிவேகமாக செயல்படக்கூடும். 2022-யின் படி, உலக அளவில் சுமார் 500 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது உலக மக்கள்த் தொகையை விட 62% ஆகும், எதிர்காலத்தில் இன்னும் இணைய பயனர்கள் அதிகரிக்க கூடும். 
 
எதிர்காலத்தில் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அனைத்துமே இணையமையமாக மாற்றப்படும். உதாரணமாக, கல்வி, வங்கிகள், அரசு, மற்றும் தொழில்துறை போன்ற பல. மேலும் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் வழியாக வீட்டிலிருந்து நாம் அனைவரும் இணைந்து செயல்படுவதற்கான தொழில்நுட்பம் வளர்ச்சியை கண்டுயுள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து, இணையத்தின் வழியாக நடக்கும் குற்றங்கள் குறையும், இணைய பாதுகாப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு முன்பு இருப்பதைவிட பாதுகாப்பு அதிகரிக்க கூடும். மேலும் இணைய சார்ந்த தொழில்துறைகள் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு ஆகியவற்றை வருங்காலத்தில் காணலாம். 
Posted in True Facts on December 02 2022 at 12:31 AM

Comments (0)

No login