ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான பொதுவான உண்மைகள்
நாட்டின் வளர்ச்சி என்பது வெவ்வேறு நாடுகளை ஒப்பபிடுவாதற்கான மிக முக்கியமான பண்புகளான மனிதவளம், இயற்க்கை வளங்கள், பௌதீக மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மிகவும் மேம்பட்ட நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படுகிறது. மேலும் அனைத்து நாடுகளும் இதில் மகவும் கவனம் செலுத்தி வருகின்றன.
ஒரு நாடு தொழில்நுட்பத்தில் ஆராச்சியை ஊக்குவிப்பதிலும், தங்கள் நாட்டின் தொழிலாளர்களின் திறன்கள் மற்றும் கல்வியை மேம்படுத்துவதிலும் தோல்வியடையும் போது பின்தங்கிவிடுகிறது. அதாவது, குறைந்த வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படுகிறது.
வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதார காரணிகள் மட்டும் சார்ந்தது மட்டுமல்ல, அந்நாட்டின் மக்கள் பயன்படுத்துக் கிடைக்கும் வளங்களையும் சார்ந்தது. அவ்வாறு மக்களின் தனிநபர் வருமானம் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் போது வறுமை, குற்றங்களின் விகிதம், கல்வியறிவின்மை ஆகியவற்றைக் குறைக்கிறது. மேலும், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி அல்லது மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு மற்றும் சமூக முன்னேற்றம் கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் பொது சேவைகளை வழங்குதல் ஆகியவை உள்ளடக்கியது.
இதை எளிமையாக சொல்லவேண்டுமென்றால், மக்கள் அதிக வருமானத்தைக் கொண்டியிருதால் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் பெற முடியும். இது நாட்டின் வளர்ச்சி மற்றும் வருமானத்தை அளவிடுவதற்கும், ஒப்பிடுவதற்க்கும் அடிப்படையாகும்.
இதற்கு எடுத்துக்கட்டாக, இந்தியா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுமார் 3.17 டிரில்லியன்கள் அளவிலான மதிப்பினைக் கொண்டு 6 வது இடத்தில் உள்ளது. முதல் 5 இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் லண்டன் ஆகிய நாடுகள் உள்ளன. இது உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Comments (0)