தங்க நாணயத்தின் தோற்றம்
பண்டைய காலத்தின் பண்டமாற்று முறைக்கு பிறகு, கி. மு 5 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் முதல் தங்க நாணயங்கள் தற்ப்போது துருக்கியின் ஒரு பகுதியாக இருக்கும் லிடியாவின் ராஜா குரோசஸ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று பண்டைய வரலாறு பதிப்புகள் கூறுகின்றன. இது காகிதப் பணம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு அவை பல நாடுகளில் நாணயமாக புழக்கத்தில் இருந்தன.
இந்தியாவின் முதல் தங்க நாணயம்
இந்தியா வரலாற்றின் படி, கி. மு 6 ஆம் நூற்றாண்டு, உலகில் தங்கம் நாணயங்களை முதலில் வெளியிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், செம்பு மற்றும் வெள்ளி உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. அதாவது, கி. மு 1 ஆம் நூற்றாண்டில், இந்தோ- கிரேக்க இராச்சியத்தின் நாணயங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிருந்தும் நாணயங்கள் அதிகளவில் புழங்க தொடங்கின. இந்த நேரத்தில் ஏராளமான பழங்குடியினர், வம்சங்கள் மற்றும் ராஜ்யங்கள் தங்கள் நாணயங்களை வெளியிடத் தொடங்கின.
கி.பி 1-3 ஆம் நூற்றாண்டுகள், குஷான் பேரரசர் விமா கடாபிசஸ், இந்தியாவில் தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியதற்கு பொறுப்பானவர் என்று கூறப்படுகிறது. குஷான் பேரரசின் விரிவான நாணயங்கள் குப்தர்களின் மற்றும் காஷ்மீரின் பிற்கால ஆட்சியாளர்களின் நாணயங்களில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியது.
இந்தியாவுடனான ரோமானிய வர்த்தகத்தின் ஆரம்பகால எழுச்சியின் போது, இந்த வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்படும் தங்க நாணயங்கள், குஷான் பேரரசால் தங்கள் சொந்த நாணயத்திற்காக மறுசுழற்சி செய்யப்பட்டன. இவை இந்தியாவில் காணப்படும் வெளிநாட்டு நாணய பதுக்கல்கள் பண்டைய, இடைக்கால மற்றும் பிற்கால காலனித்துவ காலத்தின் இந்திய வர்த்தக முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
Comments (0)