CPU என்பதன் விரிவாக்கம் Central Processing Unit ஆகும்.
CPU பெரும்பாலும் கணினியின் மூளை என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், Software - ஐ மூளை என்றும், CPU - ஐ மிகவும் திறமையான கால்குலேட்டர் என்றும் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.
ஒரு கணினியின் CPU கணினியில் இயங்கும் Hardware மற்றும் Software- லிருந்து பெறும் அனைத்து வழிமுறைகளையும் கையாளுகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் கணினியில் இந்த Web Page- ஐ திறந்து காண்பிக்க, Web Browser -ஐ பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை CPU செயல்படுத்தினது.
நவீன கணினிகளில், CPU ஆனது Microprocessor என்று அழைக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட சர்க்யூட் சிப்பில் உள்ளது.
Control Unit என்பது கணினியின் செயலிக்குள் செயல்பாடுகளை இயக்கும் சுற்று ஆகும். இது கணினியின் Logic unit, Memory மற்றும் Input மற்றும் Output சாதனங்கள் இரண்டும் ஒரு நிரலிலிருந்து பெறப்பட்ட வழிமுறைகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை அறிய உதவுகிறது.
Arithmetic Logic Unit (ALU) என்பது Central Processing Unit- ன் ஒரு முக்கிய அங்கமாகும், Arithmetic மற்றும் Logical பணிகளை மேற்கொள்ளுவது இதன் பணியாகும்.
Comments (0)