RAM ஆனது கணினியின் வேகத்தை நிர்ணயிக்கிறது. கணினியின் முக்கிய பாகங்களில் முக்கியமானது RAM.
கம்ப்யூட்டர் சரியாக இயங்கிட, சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும்.
நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன. RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் RAM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே.
RAM (Random Access Memory) என்பது தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அமைப்பு. பொதுவாக Motherboard இல் இது அமைக்கப்பட்டு இருக்கும். RAM என்பது தரவுகளை சேமித்து வைக்க கூடிய அமைப்பு ஆனால் நிரந்தரமாக அல்ல, கணினி ஆப் செய்யப்பட்டவுடன் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மெமரி அழிந்துவிடும். ஆகையால் தான் RAM ஐ Volatile Storage என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
ஒரு கணினி இயங்கும் போது அதற்கு தேவைப்படுகின்ற தரவுகளை RAM மெமரியில் தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த மெமரியை CPU ஆல் எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு நீங்கள் Photoshop அப்பிளிகேஷன் பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கணினி உடனடியாக தேவையான பைல்கள் அனைத்தையும் RAM க்கு கொண்டுவரும். ஒருவேளை உங்களது RAM அளவு குறைவானதாக இருப்பின் Photoshop அப்ளிகேஷன் சரியாக இயங்காது. இதனை தான் நாம் Slow அல்லது hang ஆகிறது என்போம்.
மறுபக்கம் ROM என்பது Non Volatile Storage என அழைக்கப்படுகிறது. இதில் சேமித்து வைக்கப்படும் தரவுகள் கணினியை ஆப் செய்தாலும் அழிவதில்லை. உதாரணமாக நீங்கள் சேமித்து வைத்திருக்கும் வீடியோ அல்லது புகைப்படம் அல்லது பாடல் போன்றவை இந்த மெமரியில் தான் இருக்கும்.
RAM இல் இரண்டு வகைகள் இருக்கின்றன.
- Dynamic RAM (DRAM)
- Static RAM (SRAM)
Static RAM (SRAM) –என்பது ஒரு நிலையான வடிவத்தில் தரவை வைத்திருக்கும் ஒரு வகை ரேம் ஆகும், அதாவது நினைவகத்தில் சக்தி இருக்கும் வரை. ஆனால் இது DRAM செய்யும் விதத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டியதில்லை.
Dynamic RAM (DRAM) – பெரும்பாலான தனிப்பட்ட கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை உடல் நினைவகம். டைனமிக் என்ற சொல், நினைவகம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் அல்லது அதன் உள்ளடக்கங்களை இழக்க நேரிடும் என்பதைக் குறிக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தன்னிடம் இருக்கின்ற தகவலை refresh செய்துகொண்டே இருக்கும். அதாவது தன்னிடம் இருக்கின்ற தகவலை அழித்துவிட்டு ஒரிஜினல் தகவல் எங்கு இருக்கிறதோ அங்கு இருந்து தகவலை புதுமைபடுத்திக்கொள்ளும்.
Dynamic Ram- ஐ விட Static Ram வேகமானது மற்றும் குறைந்த ஆவியாகும், ஆனால் அதற்கு அதிக சக்தி தேவைப்படுகிறது மற்றும் அதிக விலையும் உள்ளது.
Comments (0)