கணினி பல மின்னணு கருவிகள் இணைந்து உருவாக்கப்பட்ட இயந்திரம். அப்படிப்பட்ட சில முக்கியமான சில பாகங்களை பற்றி அறியலாம்.
Input Unit – தகவலை உள்ளீடு செய்வதற்கான கருவிகள் Input Devices எனப்படும். உதாரணத்திற்கு கீபோர்ட், மவுஸ்,போன்றவற்றை கூறலாம்.
Output Unit – கணினி தன்னிடம் இருக்கும் தகவலை பயனாளர்களுக்கு கொடுக்க பயன்படுகின்ற பாகங்கள் Output Devices எனப்படும். உதாரணத்திற்கு திரை, பிரிண்டர் போன்றவற்றை கூறலாம்.
Control Unit : கணினியில் நடக்க கூடிய அனைத்து பணிகளையும் கட்டுப்படுத்துகிற அமைப்பு. Input மற்றும் output உள்ளிட்ட அனைத்து பாகங்களும் இதனுடன் தான் இணைந்திருக்கும்.
Arithmetic Logic Unit : கணினியின் மிக முக்கியமான பகுதி இதுதான். Arithmetic மற்றும் logical functions அனைத்தும் இங்குதான் நடைபெறும்.
Memory : தகவல்களை சேகரித்து வைக்கும் அமைப்பு.
CPU : கணினியில் அதிகப்படியான பணிகளை செய்யும் அமைப்பான CPU , தன்னிடம் இருக்கும் Instructions களை பயன்படுத்தி Input கருவிகளில் இருந்து பெறக்கூடிய தகவல்களை Process செய்து output கருவிகளுக்கு அனுப்புகிற பணியினை மேற்கொள்ளும்.
Comments (0)