Backdrawer

Other Entries

life journey of Suryakumar Yadav

சூர்யகுமார் யாதவ்

450_3caea62fa0b4b33c76866ffd13f91f41.png
 
ஆரம்பக்கால வாழ்க்கை
 
சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள காஜிபூரில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அசோக் குமார் யாதவ் மற்றும் ஸ்வப்னா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை BABC-யின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பணிக்காக உத்தரகாண்டிலிருந்து மும்பைக்கு குடிப்பெயர்ந்தார். சூர்யகுமார் சிறுவயதிலிருந்தே, கிரிக்கெட் விளையாடுவாதில் ஆர்வம் கொண்டியிருந்தார். அவருக்கு 10 வயது ஆனப்போது, அவரது தந்தை அனுசக்தி நகரின் BABC காலனியிலுள்ள கிரிக்கெட் முகாமில் அவரை சேர்ந்தார். அதன்பிறகு, எல்ஃப் வெங்சர்க்கார் ஆகாடமிக்கு சென்று இளம் வயது பிரிவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். மேலும், அவர் மும்பையிலுள்ள பிள்ளை கல்லூரி கலை, வணிகம் மற்றும் அறிவியல் இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆவார்.  
 
உள்நாட்டு கிரிக்கெட் பயணம்
 
2010-2011 சீசனில், ரஞ்சி கோப்பையின் போது, சூர்யகுமார் யாதவ் மும்பை கிரிக்கெட் அணிக்காக டெல்லி அணிக்கு எதிரான முதல் தர போட்டியில் அறிமுகமானார். அவர் மும்பைக்காக முதல் இன்னிங்ஸில் அரை சதத்தை அடித்து சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 
 
2010-2011 சீசனில்,அவர் 22 வயதுக்குட்பட்டோர் மட்டத்தில் 1000 ரன்களுக்கு மேல் அடித்தார் மற்றும் MA சிதம்பரம் கோப்பையை வென்றார்.
 
2011-2012 ரஞ்சி கோப்பை சீசனில்,அவர் மூன்றாவது ஆட்டத்தில் ஒரிசாவுக்கு எதிராக இரட்டைச் சதத்தை அடித்தார், அடுத்த ஆட்டத்தில் அதைத் தொடர்ந்து மற்றொரு சதத்தைப் பெற்றார். அவர் துலீப் கோப்பைக்கான போட்டியில் மேலும் ஒரு சதத்துடன் சீசனை முடித்தார்.  அவர் 754 ரன்களுடன் மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்.
 
2013-2014 சீசனின் போது, அவர் மும்பையிலிருந்து முதல் மூன்று அதிக ரன்களை எடுத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
 
இந்தியன் பிரீமியர் லீக்
 
2012 சீசனுக்கான ஐபிஎல் அவர் மும்பை இந்தியன்ஸிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் அந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.
 
2014 இல், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2015 இல், ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் 20 பந்துகளில் ஐந்து சிக்ஸர்களுடன் 46 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் அணியின் துணை கேப்டனாக இருந்து தொடர்ந்து விளையாடினார்.
 
2018 யில், அவர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, 2022 ஐபிஎல் போட்டியிலும் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக சிறப்பான விளையாட்டு செயல்திறனை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஆசிய கோப்பை 2022 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பட்டியலில் இடம்பிடித்தார். 

சர்வதேச கிரிக்கெட் பயணம்
 
450_a49b885032b749305a884e48429f4efd.jpeg
 
2021 மார்ச் 14 அன்று, சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக தனது T20I அறிமுகமானார். பின்னர், மார்ச் 18 அன்று தொடரின் நான்காவது ஆட்டத்தில் விளையாடி, பேட்டிங் செய்வதற்கான முதல் வாய்ப்பைப் பெற்றார், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எதிர்கொண்ட முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்தார், சர்வதேச T20 இல் அவ்வாறு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அவர்  இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் சர்வதேச அணியில் அவர் இடம் பெற்றார்.
 
ஜூன் 2021 இல், இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் ஒரு நாள் சர்வதேச அணி மற்றும் சர்வதேச T20 அணிகளில் அவர் இடம் பெற்றார். அவர் 18 ஜூலை 2021 அன்று, இலங்கைக்கு எதிராக இந்தியாவுக்காக தனது ODI அறிமுகமானார். ஜூலை 21 அன்று நடந்த இன்னிங்ஸில் சூர்யா குமார் யாதவ் தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியின் அரைசதத்தை இலங்கைக்கு எதிராக அடித்தார்.
 
ஜூலை 2021 இல், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் அழைக்கப்பட்டார்.
 
செப்டம்பர் 2021 இல், அவர் 2021 ICC ஆண்கள் T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். நவம்பரில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணியில் அவர் சேர்க்கப்பட்டார்.
 
ஜூன் 2022 இல், அயர்லாந்துக்கு எதிரான சர்வதேச T20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றார். ஜூலை 2022 இல், சூர்யகுமார் யாதவ் தனது முதல் T20I சதத்தை இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிராக 55 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். டி20யில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் ஆவார். 
 
ஆகஸ்ட் 2022 இல், அவர் ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.  

தனிப்பட்ட வாழ்க்கை
 
450_0b3fc3453aece974a39cf2d512515dd4.jpg
 
2016 இல், சூர்யா குமார் யாதவ் அவர்கள் தேவிசா ஷெட்டி என்ற பெண்ணை மணந்தார். 
 
Posted in Biography on September 04 2022 at 05:06 AM

Comments (0)

No login

Popular Blogs