Backdrawer

Other Entries

Life History of Kallam Anji Reddy

டாக்டர். அன்ஜி ரெட்டி

 
450_8cdc1e2f8fd14071431a5cfa4ceb4aad.jpg
 
 
பிறப்பு
 
டாக்டர். அன்ஜி ரெட்டி அவர்கள் இந்தியாவின், ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள தாடேபள்ளி என்னுமிடத்தில் 1939 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று பிறந்தார். 

கல்வி
 
மும்பையில் உள்ள வேதியியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துறையில் (B.Sc) தொழில்நுட்பப் பட்டம் பெற்ற இவர் பின்னர், புனேவில் உள்ள தேசிய இரசாயன ஆய்வகத்தில் வேதியியல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 

ஆரம்பக்கால வாழ்க்கை
 
இவரது ஆரம்பக்கால வாழ்க்கையானது, படிப்பு முடிந்ததும், 1967 ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இந்திய மருந்துகள் மற்றும் மருந்துகள் லிமிடெட் (IDPL) இல் ஆறு ஆண்டுகள் பணியாற்றி அவர் 1973 ஆம் ஆண்டில் IDPL விட்டு வெளியேறினார், அதன்பிறகு அவர் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தால் அடுத்த பத்தாண்டுகளில், இரண்டு மருந்து தயாரிப்பு நிறுவங்களை இணைந்து நிறுவினார்.
 
பின்னர், 1984 ஆம் ஆண்டு மருந்து ஆய்வகத்தை நிறுவிய அவர், 1985 ஆம் ஆண்டிலியிருந்து இந்நிறுவனமானத்தை முழுமையாக செயல்ப்படுத்த தொடங்கினார். இதுவே கடைசி வரை, டாக்டர் அஞ்சி ரெட்டி அவர்கள் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி ஒரு தனி நிறுவனத்தை அமைக்கும் அளவிற்கு, மருந்து கண்டுபிடிப்பு மீதான தனது ஆர்வத்தின் மேல் உண்மையாக இருந்தார்.

தொழில்
 
1984 ஆம் ஆண்டில், ஒரு சாதாரண முதலீட்டைக் கொண்டு 20 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது இன்று, 56 நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகள் மற்றும் அந்நிறுவனத்தில் சுமார் 23,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சேர்ந்து மலிவான மற்றும் புதுமையான மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. சர்க்கரைநோய் மற்றும் கேன்சர் நோய்களுக்கான மருந்துக்களை அதிகளவில் உற்பத்தியை செய்துவந்தது. 
 
1986-யில் பாம்பே பங்குச் சந்தை IPOவில் இந்நிறுவனமானது  பட்டியலிடப்படுகிறது. அதே ஆண்டில் மெத்தில்டோபா என்ற மருந்து மூலப்பொருளை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்நிறுவனம் சர்வதேச சந்தையிலும் நுழைகிறது. அதற்கு அடுத்த ஆண்டு 1987-யில் இவர்களின் மருந்து மூலப்பொருளான இப்யூபுரூஃபனுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமிடமிருந்து (USFDA) அனுமதியைப் பெற்றது. 
 
1990 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து முதன்முறையாக புதிய மருந்து மூலக்கூறுகளான நோர்ஃப்ளோக்சசின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சசின் ஆகியவை ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1991-யில் இவர்கள் ஒமேப்ரஸோலை உற்பத்தி செய்யத் தொடங்கினர். பின்னர், 1992-யில் இந்நிறுவனமானது ரஷ்யாவின் சந்தைக்குள் நுழைகிறது அதுவே அவர்களின் பெரிய சர்வதேச சந்தையாக உருவானது. 
 
90-களில் இந்தியாவில் கடுமையான வறுமை மற்றும் பணமதிப்பியின்மையால் ஏற்ப்பட்ட பாதிப்பை சரிச்செய்யும் நோக்கத்தில் மக்களுக்கு மலிவான விலையில் கிடைப்பதற்க்காகவும், மனித மற்றும் சமூக மேம்பாட்டிற்க்காகவும் 1995 ஆம் ஆண்டு  டாக்டர் ரெட்டி அறக்கட்டளையை நிறுவினார். 
 
2002-ல் உடல்நலக் கல்விக்கான டாக்டர் ரெட்டிஸ் அறக்கட்டளை மும்பையில் மார்பக புற்றுநோய்க்கான உதவி மையத்தை அமைத்தது. அது மட்டுமில்லாமல் மேம்பட்ட புரோஸ்டேட் புற்றுநோய்க்கான மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, நாட்டில் அவ்வாறு செய்ய Bicalutamide ஐ அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாகும். 
 
2006 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் வருவாயானது 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து, 2009-ல் ரஷ்யா மற்றும் ஈரோப்பிய பிராந்தியத்தில் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டியிருந்தனர். 
 
2012 ஆம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனத்தின் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாகப் பெற்றுயிருந்தது. 
 
தனிப்பட்ட வாழ்க்கை
 
450_f8c7fe73ae68f68d0e08a6ddaac9bfba.jpeg

 

450_7b74fdde534d65ec2afc784399c3b0b8.jpeg
 
டாக்டர். அன்ஜி ரெட்டி அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டுக் குழந்தைகள் அனுராதா என்ற மகளும், கல்லம் சதீஷ் ரெட்டி என்ற மகனும் உள்ளனர். 
 
இவர் 2013 மார்ச் 15 அன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலைக் குறைவால் உயிரியிறந்தார். 

பணியாற்றிய மற்ற துறைகள்
 
இவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான இந்தியப் பிரதமர் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார்.
 
மேலும் இவர் ஆந்திரப் பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (APIDC) தலைவராகவும் மற்றும் இந்திய மருந்துக் கூட்டணியின் தலைவராகவும் இருந்துள்ளார். 

விருதுகளும் மரியாதைகளும்
 
450_22176d6b683aad79a8b966a482404174.jpeg
 
 
2001 ஆம் ஆண்டு இந்திய மருந்துத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வழங்கியது. 
 
2011 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதை டாக்டர். அன்ஜி ரெட்டி அவர்களுக்கு வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.
 
இவர் "An Unfinished Agenda: My Life in the Pharmaceuticals Industry" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியீட்டுயுள்ளார். 
 
Posted in Biography on May 18 2022 at 06:17 PM

Comments (0)

No login