நாம் நமக்கு தேவையான ஒரு ஆவணத்தை உருவாக்கும் போது எழுத்துபிழை இருந்தால் அல்லது ஏற்கனவே உருவாக்கின ஆவணத்தில் எழுத்துபிழை இருந்தால் அதை நாம் சுலபமாக கண்டுபிடித்து சரிசெய்யலாம்.
Status bar -ல் புத்தகம் திறப்பது போல் இருக்கின்ற symbol- ல் x (தவறு) அல்லது ✔ (சரி) என்று சிறியதாக இருக்கும். இதற்கு பெயர் word found proofing errors ஆகும்.
ஆவணத்தில் உள்ள எழுத்துக்களில் சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இருந்தால் எழுத்துக்களில் பிழை இருக்கிறது என்று அர்த்தம்.
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களில் இரண்டு எழுத்துக்கள் பிழை இருப்பதால் சிவப்பு கோடுகளில் underline செய்யப்பட்டுள்ளது. Status bar- ல் உள்ள word found proofing errors (spell check)- ல் x-(தவறு)ம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் உள்ள எழுத்துபிழையை சரிசெய்வதற்கு அந்த எழுத்தில் cursor- ஐ வைத்து right click செய்தால் சரியான எழுத்தை காண்பிக்கும். அதனை தேர்வு செய்து எழுத்துபிழையை சரிசெய்யலாம்.
இந்த படத்தில் உள்ள எழுத்துபிழையை சரிசெய்வதற்கு அந்த எழுத்தில் cursor- ஐ வைத்து status bar- ல் உள்ள word found proofing errors- ஐ click செய்தால் ஒரு side bar தோன்றும், அதில் சரியான எழுத்து சுட்டிகாண்பிக்கப்படும், அதனை தேர்வு செய்து change என்பதை click செய்து மாற்றவும்.
Comments (0)