முதலில் ms word- ஐ open செய்துக் கொள்வோம். இதில் காணப்படும் முக்கியப்பகுதிகளை தெரிந்துக்கொள்வோம்.
File Tab:’
நாம் ஆவணங்களை Open, Save, Print, Share, Export, Product செய்ய இதனை பயன்படுத்துகிறோம். Backstage view- க்கும் இதனை பயன்படுத்துகிறோம்.
Quick Access Toolbar:
File tab-க்கும் மேலே இருக்கின்ற இந்த Toolbar- ஐ நாம் ஆவணங்கள் தயாரிக்கும் போது அடிக்கடி பயன்படுத்தும் Tool-களை இதன்மூலம் பெற்று விரைவாக வேலைகளை முடிக்கலாம்.
Ribbon:
இந்த Ribbon tab- ஆனது பல tab- களை உள்ளடக்கியது ஆகும். Home, Insert, PageLayout, Design….,
Title bar:
இது ஆவணத்தின் பெயர்களை தலைப்பு பகுதியில் காண்பிக்கிறது.
Ruler:
Word Page- ல் இரண்டு Ruler கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று horizontal ruler இவை margin அமைக்கவும், மற்றொன்று vertical ruler இவை Page-ன் Vertical நிலையை அமைக்கவும் பயன்படுகிறது.
Dialog Box Launcher:
ஒவ்வொரு Group Corner- ல் ஒரு சிறிய கட்டத்திற்குள் arrow symbol கொடுக்கப்பட்டுள்ளது. இதனை Click செய்வதன் மூலம் அந்த group- ஐ பற்றி கூடுதல் தகவல்களை தெரிந்துக்கொள்ள ஒரு Box Open ஆகும்.
Status bar:
ஆவணத்தில் எத்தனை பக்கங்கள், எத்தனை எழுத்துக்கள், எத்தனை வரிகள் உள்ளன என்பதை காண்பிக்கிறது.
Document area:
ஆவணத்தில் எழுத்துக்களை Type செய்யும் பகுதியை குறிக்கிறது.
Zoom Control:
ஆவணத்தில் உள்ள தகவல்களை நாம் பெரியதாகவும் மற்றும் சிறியதாகவும் பார்ப்பதற்கு இது பயன்படுகிறது.
Comments (0)