CSS Text Properties:
பல்வேறு CSS font பண்புகளைத் தவிர, உங்கள் உரையை வடிவமைக்க உதவும் பிற பண்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நீங்கள் உரையின் நிறத்தை மாற்றலாம், உரையை சீரமைக்கலாம், அலங்கார பண்புகளைச் சேர்க்கலாம், மற்றும் பலவற்றை செய்யலாம்.
CSS text-color - இந்த பண்பு மூலம் உரையின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.
CSS text-align - இந்த பண்பு மூலம் உரையை நடுமையம், இடதுபுறம் மற்றும் வலதுபுறமாகவும் அமைக்கலாம். உரை இடதுபுறம் மற்றும் வலதுபுறம் சம அளவில் இருக்க Justify என்று கொடுக்கவும். மதிப்புகள் (left, right, center, justify).
CSS text-indent – உரையின் முதல் வரியை தேவையான அளவு இடம் விட்டு ஆரம்பிப்பதற்கு உதவுகிறது.
CSS letter-spacing – எழுத்து உறுப்புக்களுக்கு தேவையான அளவு இடைவெளியை ஏற்படுத்துகிற்து.
CSS word-spacing - எழுத்துக்களுக்கு தேவையான அளவு இடைவெளியை ஏற்படுத்துகிற்து.
CSS text-decoration - உரையில் கோடுகளை அமைக்க அல்லது அகற்ற பயன்படுத்தப்படுகிறது. மதிப்புகள் (overline, line-through, underline, none).
CSS text-transform – உரை uppercase மற்றும் lowercase –ஆக மாற்றுவதற்கு உதவுகிறது. மேலும் ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை uppercase –ஆக மாற்ற capitalize பயன்படுகிறது.
CSS text-shadow – உரையை சாதாரன shadow –வாகவும், வண்ணம் சேர்ந்த shadow –வாகவும் மாற்ற உதவுகிறது.
Output:
Comments (0)