webteam

What is Frames in HTML?

Frames:

  • ஒரு link-ஐ சொடுக்கும்போது, அதன் வெளிப்பாடு ஒரு புதிய பக்கத்தில் இடம்பெறாமல், அதே பக்கத்தில் இடம்பெறுமாறு செய்ய frames உதவுகிறது. இதன் மூலம் திரையைக் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியில் links-ம் அடுத்த பகுதியில் அதற்கான வெளிப்பாடும் வருமாறு செய்யலாம்.

<frameset> tag

  • இது திரையை பல பிரிவுகளாவாகப் பிரிக்க உதவுகிறது. இதன் cols-எனும் attribute திரையை இடமிருந்து வலமாகவும், - rows எனும் attribute திரையை மேலிருந்து கீழாகவும் பிரிக்க உதவுகிறது.
  • இத்தகைய பண்புகளின் மதிப்புகளை சதவீதத்தில் கொடுப்பது புரிந்து கொள்ள சற்று சுலபமாக இருக்கும். இது <body> tag-க்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்குள் <body> - tag க்குள் பயன்படுத்திய tags-க்கு இடமில்லை.

<frames> tag

  • திரையானது எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அத்தனை <frames> - tag, frameset க்குள் காணப்படும். இதன் src எனும் பண்பு, ஒரு frame-க்குள் என்ன இடம்பெற வேண்டும் என்பதைக் குறிப்பிடப் பயன்படுகிறது. அடுத்ததாக name எனும் பண்பு ஒவ்வொரு frame-க்கும் பெயரிட உதவுகிறது. இத்தகைய tags-ஐக் கொண்டு உருவாக்கப்பட்ட  html என்ற program-ஐ பின்வருமாறு பார்க்கலாம்.

 

450_2cf5a02cdff2c29f2e229fc07e51136a.jpeg

  • இதில் frameset-ன் cols எனும் பண்பினால் திரையானது இடமிருந்து வலமாக இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. - cols ல் கொடுக்கப்பட்ட மதிப்புகள் மூலம் முதல் பகுதியானது திரையில் 30% இடத்தையும், அடுத்த பகுதியானது மீதமுள்ள இடத்தையும் (* என்பது மீதமுள்ள 70% இடம்) எடுத்துக்கொள்கிறது.
  • திரையானது இருபகுதிகளாகப் பிரிக்கப்படவே, இதற்குள் இரு frames tag உள்ளது. முதல் frame-க்கு “left” என்றும் இரண்டாவது frame-க்கு " ” right என்றும் பெயரிடப்பட்டுள்ளது. முதல் frame-ல் src-ன் மதிப்புhtml என்றிருப்பதால், இந்த program-ன் வெளிப்பாடு முதல் frame-க்குள் இடம்பெறும். இப்போது frame1.html என்ற program-ஐ பின்வருமாறு பார்க்கலாம்.

450_54467d7dfa63170bcdc2f15b48f750d4.jpeg

  • இந்த program-ல் உள்ள 3 - links ம் left என்று பெயரிடப்பட்ட முதல் frame-க்குள் வெளிப்படும்.

இதில் target என்று ஒரு புது பண்பு anchor tag -ல் இடம்பெற்றுள்ளதையும் அதன் மதிப்பு "right ” என்று இருப்பதையும் கவனிக்கவும். இந்தப் பண்பு அந்த link-ஐ சொடுக்கும்போது, அதன் வெளிப்பாடு புது பக்கத்தில் இடம்பெறாமல்,

“right ” எனும் பெயரைக் கொண்ட இரண்டாவது frame-ல் இடம்பெற உதவும். இதன் வெளிப்பாடு பின்வருமாறு காணலாம்.

Output:

 

450_00af1112f735c1fa5fe2ebc881a07e7a.jpeg

 

Posted in HTML on December 29 2021 at 07:46 PM

Comments (0)

No login